
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கட்டிட கலையை ரசித்துபார்த்து நாட்டு மக்கள் நலமுடன் வாழ மீனாட்சி சுந்தரேஸ்வரர் சன்னிதிகளில் பக்தியுடன் ஜனாதிபதி முர்மு பிரார்த்தனை செய்தார்.
இன்று காலை தனி விமானத்தில் டெல்லியில் இருந்து புறப்பட்டு மதுரைக்கு ஜனாதிபதி வருகை தந்தார். ஜனாதிபதியாக பதவி ஏற்றபின்பு, திரவுபதி முர்மு முதன் முறையாக இன்று தமிழகம் வருகை வந்தார். ஜனாதிபதியை விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என் ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.

இருநாள் பயணமாக தமிழகம் வந்த ஜனாதிபதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தார். அவருக்கு மீனாட்சி அம்மன் கோவில் சார்பில் பூரண கும்பமரியாதையும் வழங்கப்பட்ட உள்ளது. அவருக்கு கோவில் சார்பாக குங்குமம், மீனாட்சி அம்மன் சிலையை கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதமாக வழங்கப்பட்டது.முன்னதாக அவர் பொதுமக்கள் குழந்தைகளிடம் மகிழ்ச்சி பொங்க அன்பை பகிர்ந்து கொண்டார்.

குடியரசு தலைவர் வருகையையொட்டி 3500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மதிய உணவுக்குப்பின் சற்று நேரம் ஓய்வு எடுத்த அவர், அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் விமான நிலையம் சென்றடைந்தார். மதுரை விமானத்தில் இருந்து தனிவிமானம் மூலம் கோவை செல்லும் அவர், ஈஷா யோகா மையம் சார்பில் நடக்கும் சிவராத்திரி விழாவில் கலந்துகொள்கிறார்.




