hindumunnani

பக்தர்கள் மீது தாக்குதல்; சங்கரன்கோயில் டிஎஸ்பி.,க்கு இந்து முன்னணி கண்டனம்!

சற்றுமுன் அடடே... அப்படியா? நெல்லை
hindumunnani - 2026

சங்கரன்கோவிலில் பக்தர்கள் மீது போலீஸ் தாக்குதல் நடத்தியதற்கு இந்துமுன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின்- மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது….

சங்கரன்கோவிலில் கோவிலுக்குள் சாமி கும்பிட்டு திரும்பிய பக்தர்கள் உட்பட இந்து முன்னணி நிர்வாகிகள் மீது கொடூர தாக்குதல் நடத்தி நூற்றுக்கணக்கான பக்தர்களை கைது செய்ய செய்த புளியங்குடி டிஎஸ்பி அசோக் உள்ளிட்ட தென்காசி மாவட்ட காவல்துறையினரின் செயல் மிகுந்த கண்டனத்திற்குரியது.

தனது மனைவியுடன் சாமி கும்பிட்டு வெளியே வந்த இந்துமுன்னணி மாநில இணை அமைப்பாளர் K.K.பொன்னையா மீது புளியங்குடி டிஎஸ்பி அசோக் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளார். தாக்குதலில் பலத்த காயமுற்ற திரு K.K.பொன்னையா அவர்கள் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவிலில் இருந்து வெளியே வந்து காவல்துறை தாக்குதலில் படுகாயம் அடைந்த சங்கரன்கோவிலை சார்ந்த பாடகலிங்கம் என்ற பக்தர் கொடுங்காயம் அடைந்ததால் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை செய்யப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளார்

தென்காசி மாவட்ட காவல்துறை மற்றும் டிஎஸ்பி அசோக் திக மற்றும் திமுகவின் கைப்பாவையாக செயல்படுவதை காட்டுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்காசி மாவட்டம் சேர்ந்தமரத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவிலும் புளியங்குடி டிஎஸ்பி அசோக் இதே போல் பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார் இந்து கோவில் விழாக்களின் போது இந்துக்கள் மீது தாக்குதல் நடத்துவதை டிஎஸ்பி அசோக் வாடிக்கையாக வைத்துள்ளார் இது மிகுந்த கண்டனத்துக்குரியதாகும்

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

கடவுள் மறுப்பாளர் வீரமணி பொதுக்கூட்டத்தை கோமதியம்மன் கோவில் அருகில் நடத்துவதற்காக கோவிலில் இருந்து வெளியே வந்தவர்களை எல்லாம் அடித்து காயப்படுத்திய காவல்துறையின் அராஜக செயலை கண்டித்தும் தொடர்ந்து இந்துக்கள் மீது அராஜகமாக தாக்குதல் நடத்தி வரும் டிஎஸ்பி அசோக் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்துமுன்னணி மாபெரும் ஆர்ப்பாட்டத்தை வரும் 28.2.23 அன்று நடத்தவிருக்கிறது.

திட்டமிட்ட ரீதியில் கடவுள் மறுப்பாளர்களின் கூட்டத்தை கோவில் முன்பு நடத்த அனுமதி அளித்து இந்துக்களை இழிவு படுத்துவது எந்த வகையில் நியாயம்?

தொடர்ந்து திமுக அரசு இத்தகைய பொதுக்கூட்டத்திற்கு அனுமதி அளிப்பது மதக்கலவரங்களை ஏற்படுத்துவதற்காகவே என்று மக்கள் எண்ணுகிறார்கள்.கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்காசி மாவட்டம் சேர்ந்தமரத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவிலும் புளியங்குடி டிஎஸ்பி அசோக் இதே போல் பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார் இந்து கோவில் விழாக்களின் போது இந்துக்கள் மீது தாக்குதல் நடத்துவதை டிஎஸ்பி அசோக் வாடிக்கையாக வைத்துள்ளார் இது மிகுந்த கண்டனத்துக்குரியதாகும் ஆகவே DSP யை சஸ்பெண்ட் செய்து அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ALSO READ:  செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.