அதிமுக பொதுக்குழு தீர்மானம்பொதுச்செயலாளர் தேர்தல் தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு..

Published:

500x300 1856417 highcourt - 2026

பொதுக்குழு தீர்மானத்துக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து தீர்ப்பு கூறியுள்ளது.எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க. பொதுச்செயலாளராக அக்கட்சி தற்போது அதிகாரபூர்வ மாக அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இவ்வழக்குகளில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அப்போது, அதிமுக பொதுக்குழு தீர்மானத்துக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுப்பு தெரிவித்த நீதிபதி குமரேஷ் பாபு, வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

இதன்மூலம் பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை இல்லை என்றும் தெரிய வந்துள்ளதால் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக அக்கட்சி தற்போது அதிகாரபூர்வ மாக அறிவித்துள்ளது.

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதால் அவர் போட்டியின்றி தேர்வாகியுள்ளார். அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அதிமுக எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img