உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள தென்னாப்பிரிக்க, மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இன்று மோதுகின்றன. சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி, லீக் சுற்றின் 19 வது போட்டி. இதில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங் செய்யத் தீர்மானித்து களம் இறங்கியது. இது இரு அணிகளுக்குமே முக்கியமான போட்டியாக அமைந்துள்ளது. தென்னாப்பிரிக்க அணித் தலைவர் டி வில்லியர்ஸ், இந்திய அணியுடனான மோசமான தோல்விக்குப் பின்னர் மனதளவில் உற்சாகம் குறைந்து தங்கள் தன்னம்பிக்கை குலைந்துவிட்டதாகக் கூறியிருந்தார். இந்த நிலையில் இந்தப் போட்டி அவர்களுக்கு மனதளவில் தெம்பூட்ட முக்கியமான போட்டியாக அமைந்துள்ளது.

