திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சிலைகள் மாற்றப்பட்டதாகக் கூறப்படும் புகார் தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் நேரடியாக ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.
முன்னதாக ஏடிஎஸ்பி ராஜாராம் தலைமையில் அதிகாரிகளும் இங்கே ஆய்வு செய்தனர்.
ஸ்ரீரங்கம் கோயிலில் சிலைகள் மாற்றப் பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்ட குற்றச்சாட்டால், அண்மைக்காலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.




