கரூர்: கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கம் சார்பில் புதிய சங்கமாக” காந்திகிராமம் சைன்” என்ற பெயரில் 2 1 உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பின் துவக்க விழா அண்மையில் நாரதகான சபாவில் நடைபெற்றது.
மெஜஸ்டிக் சங்கத் தலைவர் ஆறுமுகசாமி தலைமை தாங்கினார் ‘ 324 ஏ2 அரிமா மாவட்ட ஆளுனர் சேக் தாவூத் புதிய சங்கத் தலைவர் சுப்பிரமணிய பாரதி தலைமையிலான குழுவினருக்கு பதவி ஏற்புச் செய்து வைத்தார்
துணை ஆளுனர் கார்த்திக் பாபு உறுப்பினர்களை பதவியில் அமர்த்தினார் மாவட்ட முன்னாள் ஆளுனர்கள், மாவட்ட அமைச்சரவை நிர்வாகிகள் , மண்டலத் தலைவர் மேலை பழநியப்பன், வட்டாரத் தலைவர் செந்தில்வேலன், சுமங்கலி லெ்வராஜ்’ பார்வைக் கோர் பயணம் மாவட்டத் தலைவர் ARK. சேது சுப்பிரமணியன், சாசனத் தலைவர் செல்வராஜ், நெறியாளர் பி.என்.அனந்தநாராயணன் வாழ்த்துரை வழங்கினர்
விழாவில் சிறந்த சேவை நோக்கு கொண்ட ஆசிரியர்களான கார் வழி ஊ.ஒ.தொ. பள்ளி தலைமை ஆசிரியர் வாசுதேவன் அய்யம்பாளையம் ஊ.ஒ.ந.பள்ளி தலைமை ஆசிரியை தே.சுகந்தி ஆகியோருக்கு” ஆசிரிய மாமணி” விருதை ஆளுனர் வழங்கினார்
மங்கள இசைக் கலைஞர்கள் தவில் B.ராமனாதன் மற்றும் A. பத்மனாபன் வாங்கல் ஆகியோருக்கு “தவில் இசைச் செம்மல் “விருதும் நாதஸ்வர கலைஞர்கள் வெங்கமேடு N, நீலவேணி மற்றும் கருர் Tஹரிபிரசாத் ஆகியோருக்கு” குழலிசைச் செம்மல் “விருதையும் ஆளுனர் சேக் தாவூத் வழங்கிப் பாராட்டினார்




