முத்திரைத் தாள் கட்டணம் உயர்கிறது..

Published:

500x300 1867095 stamp - 2026
#image_title

முத்திரைத் தாள் கட்டணத்தை உயர்த்துவதற்கான சட்டத்திருத்த மசோதாவை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். 2001ம் ஆண்டில் இருந்து முத்திரைத்தாள் கட்டணம் மாற்றி அமைக்காததால் அச்சிடும் செலவு பன்மடங்கு உயர்ந்துள்ளது. சட்டத்திருத்தத்தின் படி ரூ.20 முத்திரைத்தாள் கட்டணம் ரூ.200ஆகவும், ரூ100 முத்திரைத்தாள் கட்டணம் ஆயிரம் ரூபாயாகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

சட்டசபையில் வணிக வரி மற்றும் பதிவு துறை அமைச்சர் மூர்த்தி தாக்கல் செய்த சட்ட மசோதாவில் கூறி இருப்பதாவது:- 2001-ம் ஆண்டில் இருந்து முத்திரைத்தாள் கட்டணம் மாற்றி அமைக்கப்படவில்லை என்றும் இதனால் நீதி துறை அல்லாத அச்சிடப்பட்ட முத்திரைத்தாள் அச்சிடுவதற்கான செலவு பன் டங்காக அதிகரித்து இருப்பதால் முத்திரைத்தாள் கட்டணம் மாற்றி அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.

இந்த சட்டத்திருத்தத்தில் 100 ரூபாய் முத்திரைத்தாள் கட்டணம் 1000 ரூபாயாகவும், 20 ரூபாய் முத்திரைதாள் கட்டணம் 200 ரூபாயாகவும் மாற்றியமைக்கப்படுகிறது. இதே போல, நிறுவனங்களுக்கான சங்க விதிகளுக்கான முத்திரைதாள் கட்டணம் ஐந்து லட்சம் முதல் 10 லட்ச ரூபாய் வரையிலான முத்திரைத் தாள் கட்டணம் 500 ரூபாயும், நிறுவனங்களுக்கான ஆவணங்களுக்கான முத்திரைத்தாள் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டு சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

இந்த சட்டமசோதா பேரவையில் நிறைவேறியவுடன் அமலுக்கு வர உள்ளது.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img