
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது.
அட்சய திரிதியை முன்னிட்டு தமிழகத்தில் இன்று நகைக்கடைகள் முன்கூட்டியே திறந்தன. இதனால் வழக்கமாக காலை 9 மணிக்கு வெளியாகும் தங்கம், வெள்ளி விலை நிலவரம் காலை 7.30 மணிக்கே வெளியானது.
அதன்படி இன்று ஏப்ரல் 22ஆம் தேதி 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.44,840க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ரூ.60 குறைந்து ரூ.5605க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் சுத்த தங்கம் ஒரு சவரன் ரூ.48,472க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை கிராமுக்கு 90 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.80.40க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.80,400.00க்கு விற்பனை செய்யப்படுகிறது.