சபரிமலை மண்டல மகரவிளக்கு மஹோத்சவத்திற்கு முந்தைய நாள், நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்ட அனைத்தும் எண்ணப்பட்டு இன்று கருவூலம் பூட்டப்பட்டது.
காசி தமிழ் சங்கமம் 3.0 பிப்ரவரி 14 முதல் நடக்கிறது. காசி, ப்ரயாக்ராஜ், அயோத்தி இந்த 3 ஊர்களுக்கும் இலவசமாக சென்று வரலாம். இந்த லிங்கில் பதிவு செய்யவும்.
காலையில் கரூர் டூ திருச்சி பேருந்தில் சென்று, திருச்சி விமானநிலையம் மூலம் சென்னை விமானநிலையம் சென்று, அங்கு (சென்னை) தலைமை செயலகம், இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் போர் நினைவுத்தூண் ஆகியவற்றை பார்வையிட்டனர்.
ஈ.வெ.ரா-வைத் திமுக ஆதரித்தால் என்ன, சீமான் கட்சி எதிர்த்தால் என்ன? இரண்டு கட்சிகளும் கோணலான அர்த்தத்தில் ஒளவையாரின் ஆத்திசூடி சொற்களை ஏற்கின்றன: பெரியாரைத் துணைக் கொள்!
முதலமைச்சர் ஸ்டாலின், தங்கள் ஆட்சியின் அவலத்தைச் சரி செய்யாமல், அப்பாவி பொதுமக்களைத் துரத்துவது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ள தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை
ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் எதிர்பார்ப்பது பழைய ஓய்வூதியத்திட்டமே தவிர குழு அமைப்பது அல்ல என்பதால் சொன்னதைச்செய்யும் அரசு எனக் கூறிக் கொள்ளும் தமிழக அரசு

ரூ.30,000 கோடி ஊழல் தொடர்பான ஆடியோவுக்கு இதுவரைக்கும் முதலமைச்சர் மறுப்பு தெரிவிக்காதது ஏன்? ஏழை, எளிய மாணவ-மாணவிகள் மருத்துவராக வேண்டும் என்கிற கனவை நிறைவேற்றிய அரசு அ.தி.மு.க. அரசு.
தி.முக. அரசு கும்ப கர்ண தூக்கத்தில் இருந்து எழுந்து போதை பொருளை கட்டுப்படுத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பிறகு எடப்பாடி பழனிசாமி முதன்முறையாக தனது சொந்த தொகுதியான எடப்பாடிக்கு வருகை தந்தார்.
அவருக்கு தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அவர் தொகுதிக்குட்பட்ட கொங்கணாபுரம் பகுதியில் அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- சேலம் மாவட்டத்தில் விவசாயிகளின் நலன் கருதி 100 ஏரிகளை நிரப்பும் திட்டம் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டம் இன்றைக்கு முடங்கி கிடக்கிறது. முதியோர் உதவி தொகை கூட பல இடங்களில் நிறுத்திவிட்டார்கள்.
தி.மு.க.பொறுப்பேற்ற பிறகு நம்முடைய எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு ஒரு சிறு பணிகளை கூட செயல்படுத்தப்படவில்லை. வேண்டும் என்றே திட்டமிட்டு புறக்கணிக்கிறது. திருமண மண்டபங்களில் மதுவுக்கு அனுமதி அளித்த உத்தரவை கடும் கண்டனம் தெரிவித்தபின் அரசு வாபஸ் பெற்றது. மக்களை பற்றி சிந்திக்காத முதலமைச்சர் இன்றைக்கு நாட்டை ஆளுகிறார்.
தி.முக. அரசு கும்ப கர்ண தூக்கத்தில் இருந்து எழுந்து போதை பொருளை கட்டுப்படுத்த வேண்டும். ரூ.30,000 கோடி ஊழல் தொடர்பான ஆடியோவுக்கு இதுவரைக்கும் முதலமைச்சர் மறுப்பு தெரிவிக்காதது ஏன்?, அரசு பள்ளியில் படிக்கின்ற மாணவ-மாணவிகள் 41 சதவீதம் ஆகும். நான் ஆட்சி பொறுப்பேற்றபோது அரசு பள்ளியில் படித்த 9 பேர் தான் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேர்ந்தனர்.
அரசு பள்ளி மாணவர்களின் நலனை சிந்தித்து நான் நீட் தேர்வு இட ஒதுக்கீட்டில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தேன். ஏழை, எளிய மாணவ-மாணவிகள் மருத்துவராக வேண்டும் என்கிற கனவை நிறைவேற்றிய அரசு அ.தி.மு.க. அரசு. ஏழை எளிய குடும்பத்தில் பிறந்த 564 பேர் இன்றைக்கு எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிக்கிறார்கள். மருத்துவ கல்வி கட்டணம் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்ந்தவர்களுக்கு அரசாங்கமே கல்வி கட்டணம் செலுத்தும் என்று அறிவித்தேன் அதன்படி மாணவ-மாணவிகள் பயன்பெற்று வருகிறார்கள்.
எடப்பாடி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க.வின் கோட்டை. என்னை முதலமைச்சராக உருவாக்கியதும் எடப்பாடி சட்டமன்ற மக்களாகிய நீங்கள் தான். பொதுச் செயலாளரானதும் உங்களுடைய ஆதரவால் தான். உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இருப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.
சபரிமலை மண்டல மகரவிளக்கு மஹோத்சவத்திற்கு முந்தைய நாள், நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்ட அனைத்தும் எண்ணப்பட்டு இன்று கருவூலம் பூட்டப்பட்டது.