தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் இன்று..

Published:

16829830103068 - 2026
பைல் படம்

தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை, நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பேசப்படுகிறது.

பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் நிதியமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு நிர்வாக சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாட்டின் பொருளாதாரச் சீர்கேட்டை சரி செய்து வருகிறார்.

இந்த நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ‘திமுக கோப்புகள்’ என்ற தலைப்பில் 2 ஆடியோக்களை சமீபத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அதில், முதல் ஆடியோவில் திமுகவைச் சேர்ந்தவர்கள் 2 ஆண்டுகளில் ரூ.30 ஆயிரம் கோடி அளவுக்கு சொத்து சேர்த்துள்ளதாக பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்பட்டது.  

அண்ணாமலை வெளியிட்ட 2 ஆவது ஆடியோ அதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. ஆடியோ விவகாரத்தை பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மறுத்திருந்தார். அந்த ஆடியோ புனையப்பட்டது என்றும், திமுக ஆட்சியின் நல்ல செயல்களை சீர்குலைக்கும் பாஜகவின் மலிவான தந்திரம் முயற்சி என்றும் தெளிவுபடுத்தினார். 

இந்த நிலையில் அண்ணாமலை அளித்த பேட்டியில், ஆடியோ விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்திற்கு சென்றால் உண்மையான ஆடியோவையும், அது எங்கே, எப்போது யாரிடம் பேசப்பட்டது என்பதையும் கொடுப்பதற்கு தயாராக இருக்கிறேன்” என்று கூறினார். 

ALSO READ:  மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

இதனால் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோ விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

இதையடுத்து கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது அலுவலகத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. அப்போது ஆடியோ சம்மந்தமாக தனது தரப்பு விளக்கத்தை அளித்ததாக கூறப்பட்டது.

விரைவில் அமைச்சரவை மாற்றம் இருக்கக்கூடும் என்ற நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை, நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்
திங்கள்கிழமை  மீண்டும் சந்தித்து பேசியுள்ளார். சிறிது நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பு தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை (மே 2) மாலை தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுவதையொட்டியே முதல்வர் மு.க.ஸ்டாலினை, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்து பேசியதாகவும், இது சாதாரணமான சந்திப்புதான் என கூறப்படுகிறது. 

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

வரும் 23-ம் தேதி முதல்வர் லண்டன் செல்கிறார். தொடர்ந்து சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கும் பயணிக்கிறார். இந்த பயணத்தின் போது, பல்வேறு துறைகள் சார்ந்த முதலீடுகளுக்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான ஒப்புதல் மற்றும் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய முதலீட்டு ஒப்பந்தங்களுக்கான ஒப்புதல் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

இதுதவிர, பேரவையில் துறைவாரியாக அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img