அதிமுக அலுவலக பொருட்களை ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு

Published:

images 76 - 2026
#image_title

சென்னையில் அ.தி.மு.க., அலுவலகத்தில் இருந்து, எடுத்துச் செல்லப்பட்ட பொருட்களை, மீண்டும் ஒப்படைக்க, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்தாண்டு, ஜூலை.,11ம் தேதி, அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம், சென்னை அடுத்த வானகரத்தில் நடந்தது.

அப்போது, பன்னீர்செல்வம், தனது ஆதரவாளர்களுடன் ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு வந்தார்.

அதில், பன்னீர்செல்வம் – பழனிசாமி ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டது. அதில், அலுவலகத்தில் இருந்த கோப்புகள் மற்றும் ஆவணங்களை பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் திருடி சென்றதாக, போலீசில் புகார் கூறப்பட்டது.இந்த வழக்கு, சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

இச்சூழலில், அ.தி.மு.க., அமைப்புச் செயலர், சி.வி.சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில், அலுவலகத்தில் இருந்து எடுத்து செல்லப்பட்ட பொருட்களை மீண்டும் ஒப்படைக்கோரி, மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், அலுவலகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட பொருட்களை, மீண்டும் அவரிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img