
கடந்த மே.15 திங்கள் அன்று, தனி ரயிலில் திருவனந்தபுரத்திலிருந்து கொல்லம், புனலூர் வழியாக செங்கோட்டைக்கு மாலை 4.40 க்கு வந்த தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்க செயலாளர் கிருஷ்ணனும் பொருளாளர் சுந்தரமும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். அந்த மனுவில் இடம்பெற்றுள்ள கோரிக்கைகளாவன….
கோரிக்கைகள் விவரங்கள் –
1) அடுத்த கட்ட அம்ருத பாரத் ரயில் நிலைய முன்னேற்ற திட்டத்தில் செங்கோட்டை ரயில் நிலையத்தை சேர்க்க வேண்டும்.
2)செங்கோட்டை – சென்னை பொதிகை அதிவேக ரயிலுக்கு ( எண் 12662) மாம்பலம் நிறுத்தம் வழங்க வேண்டும்.
3)செங்கோட்டை ரயில் நிலையத்தில் பிட்லைன் வசதி செய்து தரப்பட வேண்டும். அப்போதுதான் செங்கோட்டையிலிருந்து தென்காசி ராஜபாளையம் விருதுநகர் வழியாகவும் , தென்காசி பாவூர்சத்திரம் அம்பாசமுத்திரம் திருநெல்வேலி வழியாகவும் பிற மாநிலங்களுக்கு புதிய ரயில்களை இயக்க முடியும்.
4)செங்கோட்டை ரயில் நிலையத்தில் தற்போதுள்ள 4 நடைமேடைகளோடு புதிதாக 5வது நடைமேடையை அமைக்க வேண்டும்.
5)செங்கோட்டை ரயில் நிலைய கணினி முன்பதிவு மையம் தினசரி காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட வேண்டும்.
6)செங்கோட்டை , தென்காசி ரயில் நிலைய நடைமேடைகளில்
லிப்டுகளை அமைக்க ஏற்கனவே ஆணை பிறப்பிக்கப்பட்டும் இன்றளவும் நிறுவப்படவில்லை.அவற்றை விரைவில் நிறுவ வேண்டும்.
7)தற்போது இயங்கி கொண்டிருக்கும் வாராந்திர ரயில்கள் – நெல்லை – மேட்டுப்பாளையம் & நெல்லை தாம்பரம் – வழி அம்பாசமுத்திரம் பாவூர்சத்திரம் தென்காசி ராஜபாளையம் விருதுநகர் – இவை இரண்டையும் நிரந்தர ரயில்களாக்க ஆவன செய்ய வேண்டும்.
8)எர்ணாகுளத்திலிருந்து கொல்லம் புனலூர் செங்கோட்டை தென்காசி ராஜபாளையம் வழியாக வேளாங்கண்ணிக்கு வாரம் ஒருமுறை மே 2023 இறுதி வரை இயக்கப்படும் ரயிலை வாரம் இரு முறை நிரந்தரமாக இயக்க வேண்டும்.
9)சபரிமலை சீசனில் இயக்கப்பட்ட எர்ணாகுளம் – தாம்பரம் ரயில்களை ஜூன் 2023 முதல் அக்டோபர் 2023 வரை குற்றால சீசன் ஸ்பெஷல் ரயில்களாக இயக்க வேண்டும்.
10) தற்போது 12 பெட்டிகளோடு ஓடும் செங்கோட்டை – மயிலாடுதுறை , மயிலாடுதுறை – செங்கோட்டை முன்பதிவில்லாத விரைவு ரயில்களில் கூடுதலாக இரண்டு முன்பதிவில்லாத பெட்டிகளையும் இரண்டு முன்பதிவுடைய இரண்டாம்வகுப்பு செயர் கார்கள் பெட்டிகளையும் இணைக்க வேண்டும்.தற்போது எல்லா ஊர்களிலும் இந்த ரயில்களில் கட்டுக்கடங்காத கூட்டம் ஏறுவதால் பலருக்கு உட்கார இடம் கிடைப்பதில்லை.
11) நெல்லை – திருவனந்தபுரம் இடையே அம்பை பாவூர்சத்திரம் தென்காசி செங்கோட்டை புனலூர் கொல்லம் வழியாக தினசரி ரயில்கள் காலையிலும் மாலையிலும் இரு வழிகளிலும் இயக்கப்பட வேண்டும்.
12) வழித்தடங்கள் மின்மயமாக்கல் நிறைவு பெற்றதும் கொல்லம் – புனலூர் – செங்கோட்டை – தென்காசி – ராஜபாளையம் – விருதுநகர் பாதையிலும் கொல்லம் – புனலூர் – செங்கோட்டை – தென்காசி – பாவூர்சத்திரம் – அம்பாசமுத்திரம் – திருநெல்வேலி பாதையிலும்
MEMU ரயில்களை இயக்க வேண்டும்.
13) தற்போது கொல்லம் – புனலூர் – செங்கோட்டை பாதையில் பயணிகள் ரயில்கள் 14 பெட்டிகளுடன் மட்டுமே ஓடுகின்றன.ஆவன செய்து விரைவில் 18 பெட்டிகள் பயணிகள் ரயில்களை இயக்க வேண்டும்.
14)செங்கோட்டை தென்காசி பாவூர்சத்திரம் அம்பாசமுத்திரம் மற்றும் கடையநல்லூர் சங்கரன்கோவில் ராஜபாளையம் ஶ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி நகர மக்களுக்கு பெங்களூர் செல்ல நேரடி ரயில் வசதி தற்போது இல்லை.எனவே திருநெல்வேலியிலிருந்து அம்பாசமுத்திரம் பாவூர்சத்திரம் தென்காசி ராஜபாளையம் சிவகாசி விருதுநகர் மதுரை நாமக்கல் ஓசூர் வழியாக பெங்களூருக்கு வாராந்திர ரயில் இயக்கப்பட வேண்டும்.
15) தெற்கு வட்டார ரயில்வே கால அட்டவணை குழு சில ஆண்டுகளுக்கு முன் பரிந்துரைத்தபடி தற்போது குருவாயூர் – புனலூர் இடையே இயங்கி கொண்டிருக்கும் தினசரி விரைவு ரயிலை செங்கோட்டை தென்காசி ராஜபாளையம் சிவகாசி வழியாக மதுரைக்கு நீட்டிக்க விரைவில் ஆணை பிறப்பிக்க வேண்டும்.