100 நாள் வேலைத் திட்டத் தொழிலாளர்கள்
சாலை மறியல் போராட்டம்
விருதுநகர். மே,26
விருதுநகர் அருகே உள்ள சந்திரகிரிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதி கிராம பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் அருகே உள்ளது பாவாலி ஊராட்சி, இதன் தலைவராக அழகம்மாள் இருந்து வருகிறார். இந்த ஊராட்சிக்கு உட்பட்டது சீனியாபுரம், சந்திரகிரிபுரம், சொக்கலிங்கபுரம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வருகின்றனர்,
இந்த நிலையில் பஞ்சாயத்து தலைவர் அழகம்மாளின் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு கிராம பொதுமக்கள் பெரும் பகுதி வரவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து 100 நாள் வேலை திட்டத்திற்கு குறிப்பிட்ட சில ஊர்களைச் சேர்ந்த பணிபுரியக் கூடாது என ஊராட்சித் தலைவி அழகம்மாள் மற்றும் அவரது கணவர் தெரிவித்தார்களாம், இதனால் ஆத்திரமடைந்த 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் விருதுநகர்/எரிச்சநத்தம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து உடனடியாக நிகழ்விடத்திற்கு வந்த ஆமத்தூர் காவல் நிலைய போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர், பின்பு. அனைவரும் வேலைக்கு செல்லலாம் என உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது