
தேவராம் விண்ணை பிளக்க, திருக்குறள் வாசிக்கப்பட்டு, ஆதினகர்த்தர்கள் ஆசியுடன் பாரதத்தின் சுயபலத்தால் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்றத்தில் பாரதப்பிரதமர் திருக்கரங்களால் செங்கோல் நிறுவப்பட்டது .

முன்னதாக புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நிறுவப்படவுள்ள செங்கோலை, பிரதமா் நரேந்திர மோடியிடம் திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் சனிக்கிழமை ஒப்படைத்தாா்.
தமிழகத்தில் இருந்து தில்லி சென்ற திருவாவடுதுறை ஆதீனம் உள்பட பல்வேறு ஆதீனங்கள், பிரதமா் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தனா். அப்போது, மந்திரங்கள் முழங்க பிரதமா் மோடியிடம் செங்கோல் ஒப்படைக்கப்பட்டது.

இதர ஆதீனங்கள் தரப்பில் பிரதமா் மோடிக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. ஆதீனங்களை கெளரவித்த பிரதமா், அவா்களிடம் ஆசி பெற்றாா்.
கடந்த 1947-இல் பிரிட்டிஷாரிடம் இருந்து இந்தியாவுக்கு அதிகார மாற்றம் நடைபெற்றதைக் குறிக்கும் வகையில், மூதறிஞா் ராஜாஜியின் ஆலோசனைப்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் இருந்து நாட்டின் முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேருவுக்கு செங்கோல் வழங்கப்பட்டது.
அந்தச் செங்கோல் உத்தர பிரதேச மாநிலம், அலாகாபாத் (பிரயாக்ராஜ்) அருங்காட்சியகத்தில் உள்ள நேரு அரங்கில் வைக்கப்பட்டிருந்தது.
வெள்ளியால் செய்யப்பட்டு, தங்க முலாம் பூசப்பட்டுள்ள அந்தச் செங்கோலை தில்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் மக்களவைத் தலைவரின் இருக்கைக்கு அருகே நிறுவ மத்திய அரசு முடிவு செய்தது.
புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கும் நிலையில், ஆதீனத்தின் கையால் அவரிடம் செங்கோல் ஒப்படைக்கப்பட்டது.இதை தேவராம் விண்ணை பிளக்க, திருக்குறள் வாசிக்கப்பட்டு, ஆதினகர்த்தர்கள் ஆசியுடன் பாரதத்தின் சுயபலத்தால் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்றத்தில் பாரதப்பிரதமர் நரேந்திர மோடி திருக்கரங்களால் செங்கோல் நிறுவப்பட்டது .