ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் செப்பு தேரோட்டம்..

TN 20230628100409121429 - 2026

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் வளாகத்தில் உள்ள பெரியாழ்வார் சன்னதியில் ஆனி ஸ்வாதி விழாவில் முக்கிய நிகழ்வாக செப்பு தேரோட்டம் இன்று  நடைபெற்றது.திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் வளாகத்தில் உள்ள பெரியாழ்வார் சன்னதியில் ஆனி ஸ்வாதி திருவிழா உற்சவம் கடந்த 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் பல்வேறு மண்டபங்களில், பல்வேறு வாகனங்களில் பெரியாழ்வார் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி, வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.

IMG 20230628 WA0021 1 - 2026

விழாவின் முக்கிய நிகழ்வாக செப்பு தேரோட்டம் இன்று  நடைபெற்றது. இதற்காக சுவாமி பெரியாழ்வார் கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க செப்பு தேருக்கு எழுந்தருளினார். தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் திரு ஆனி சுவாதி உற்ஸவ செப்பு தேரோட்டம் இன்று காலை 7:00 மணிக்கு கோயிலில் இருந்து புறப்பட்டு செப்பு தேருக்கு பெரியாழ்வார் எழுந்தருளினார்.

அங்கு சிறப்பு பூஜைகளை அனிரூத் பட்டர் செய்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் 7:15 மணிக்கு பக்தர்களின் கோவிந்தா, கோபாலா கோசத்திற்கு மத்தியில் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. கோயில் யானை ஜெயமால்யதா முன்செல்ல, நான்கு ரத வீதி சுற்றி வந்து சுமார் ஒரு மணி நேரத்தில் தேர் நிலையம் அடைந்தது. விழாவில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் முத்துராஜா, வேதபிரான் சுதர்சன், ஸ்தானிகம் கிருஷ்ணன், ரமேஷ், மணியம் கோபி மற்றும் கோயில் பட்டர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர். டவுண் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பெரியாழ்வார் அவதரித்த ஆனி சுவாதி திருநாளான நாளை சாற்றுமுறை நடைபெறுகிறது.
இதே செப்புத் தேரோட்டம் பங்குனி மாதத்திலும் நடைபெறும். ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் நாச்சியார் – சுவாமி ரெங்கமன்னார் திருக்கல்யாணம் பங்குனி உத்திரம் நட்சத்திரத்தில்தான் நடைபெற்றது. இந்நாளில் இருவரும் காலையில் செப்புத்தேரில் வலம் வந்து, இரவில் திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories