
ஜூன் 27 நேற்று காலை 10 மணி அளவில் சின்னமனூர் கிழக்கு ஒன்றியம் எரசக்கநாயக்கனூர் கிராமத்தில் பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள், கால்நடை பராமரிப்பு துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் -தேனி இவர்கள் அனைவரும் இணைந்து பெயருக்கு சிறிய அளவில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த முகாமை துவக்கி வைக்க வருகை தந்த கம்பம் சட்டமன்ற உறுப்பினர் கம்பம் இராமகிருஷ்ணன் எம் எல் ஏ அவர்களை ஊர் பொதுமக்கள் 200 பேருக்கு மேல் கூடி சுற்றி வளைத்து எங்கள் ஊருக்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து எந்த நிதியும் இதுவரை நீங்கள் ஒதுக்கீடு செய்யவில்லை.
நிதி ஒதுக்கீடு செய்யாத நீங்கள் எந்த முகத்தோடு எங்கள் ஊருக்கு வருகை தந்தீர்கள்.எங்கள் ஊருக்குள் நீங்கள் வர வேண்டாம் என்றும். பலமுறை தங்களிடம் மனு கொடுத்தும் தங்கள் வீட்டிற்கு வந்து மனு கொடுத்தும் கண்டுகொள்ளாத எம்எல்ஏ நீங்கள் எங்கள் ஊருக்கு நீங்கள் வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருந்த பொழுது கம்பம் சட்டமன்ற உறுப்பினர் அவர்களோடு வருகை தந்தவர் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது கம்பம் சட்டமன்ற உறுப்பினர் உடன் வருகை தந்த ஒருவர் பொதுமக்களை கோபமாக கடுமையான வார்த்தைகளால் திட்டிய காரணத்தால் அந்த பகுதி இளைஞர்கள் அவரோடு தள்ளுமுள்ளு செய்து செய்தனர்.
மேலும் கம்பம் சட்டமன்ற உறுப்பினரை சிறை வைத்து மண்டபத்தை பூட்டி கொண்டனர். பூட்டப்பட்ட மண்டபம் 20 நிமிடங்களுக்கு பின்னால் 15க்கும் மேற்பட்ட காவல்துறையினர் வந்திருந்து சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் அவர்களை மீட்டுச் சென்றனர் ஆனால் இந்த பகுதி இளைஞர்களுடைய மனக் கொதி நிலை இன்னும் மாறவில்லை