BJP Narayanan Thiruppathi - 2026

கட்டணத்தை உயர்த்தினால் பலன் பெறுவது ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ தானே!

சற்றுமுன் சென்னை தமிழகம்
BJP Narayanan Thiruppathi - 2026
#image_title

சினிமா கட்டணத்தை உயர்த்த தியேட்டர் உரிமையாளர் சங்கம் கோரிக்கை இன்று செய்திகள் வெளியான நிலையில் அவ்வாறு உயர்த்தினால் அதனால் பாதிக்கப்படுவது சாதாரண மக்களும் பலன் பெறப்போவது ரெட்ஜயண்ட் மூவிஸும் தான் என்று பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை…

தேவையில்லை. உயர்த்தினால் பாதிக்கப்படப்போவது சாதாரண மக்கள் தான். பலனடையப்போவது ‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ போன்ற நிறுவனங்கள் தான். விழுக்காடு அடிப்படையில் விநியோகஸ்தர்களும், திரை அரங்கு உரிமையாளர்களும் கட்டணம் மூலம் பெறும் வருவாயை, முறையே 75:25 விழுக்காடு என பகிர்ந்து கொள்கிறார்கள்.

தமிழகத்தில் 3/4 திரைப்படங்கள் ரெட்ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பு / விநியோகம் என இருக்கும் நிலையில், திட்டமிட்ட ரீதியில் இந்த கோரிக்கையை முன்வைத்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அப்படி உண்மையிலேயே திரை அரங்கு உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டவர்கள் என்றால், 2017ல் 120 ரூபாய் விற்று கொண்டிருந்த ஒரு டிக்கெட், ஜி எஸ் டி வரி விதிப்பினால் 99 ரூபாயாக விலை குறைந்த நிலையில், 10% உள்ளாட்சி வரியை விதித்து 130 ரூபாயாக உயர்த்தி மக்களுக்கு பெரும் சுமையை ஏற்றிய போது தி மு க வாய் மூடி மௌனமாக இருந்தது ஏன்? குரல் கொடுக்காதது ஏன்?

அன்று உண்மையில், திரை அரங்கு உரிமையாளர்களுக்கு பிரச்சினையாக இருந்தது 10% உள்ளாட்சி வரி தான். அதை நீக்க சொல்லி போராடாதது ஏன்? விலையேற்றம் நடந்தால், அதனால் பாதிக்கப்படப்போவது பொது மக்களும், சிறு தயாரிப்பாளர்களும் தான் என்பதை மறுக்க முடியுமா? அதிக பலனடைய போவது ‘ரெட் ஜெயன்ட்ஸ்’ உள்ளிட்ட பெரு நிறுவனங்கள் தான் என்பதை மறைக்க முடியுமா?

விலையேற்றத்தின் மூலம் சாதாரண பொது மக்களின் அன்றாட வாழ்க்கையில் குழப்பத்தை, பதட்டத்தை தமிழக அரசு விளைவிக்க கூடாது. இந்த கோரிக்கையை ஏற்க கூடாது. தேவையெனில், உள்ளாட்சி வரியை ரத்து செய்து அந்த கட்டணத்தை திரை அரங்குகள் பெற்று கொள்ள தமிழக அரசு உத்தரவிடட்டும்.

உத்தரவிடுவாரா முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள்? என்று நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.