தமிழக அரசால் பெருகி வரும் மத நம்பிக்கை வெறுப்பு பிரசாரம்! இந்து சமுதாயம் முடிவு கட்டும்!

hindumunnani - 2026

தமிழக அரசால் பெருகிவரும் மத நம்பிக்கை வெறுப்பு பிரச்சாரத்துக்கு இந்து சமுதாயம் முடிவு கட்டும் என்று இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

சமீபத்தில் முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் என்ற நக்சல் இடதுசாரி பயங்கரவாத அமைப்பு சனாதனம் ஒழிப்பு மாநாடு என்ற கூட்டத்தை காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான காமராஜர் அரங்கத்தில் நடத்தியது.

அதில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெங்கு, கொரோனா போல ஒழிக்கப்பட வேண்டியது சனாதன தர்மம் என்றும் பேசியுள்ளார். சனாதனம் சமநீதிக்கும் சமூக நீதிக்கும் எதிரானது, மாற்றத்திற்கு எதிரானது என பிதற்றியுள்ளார். சனாதன தர்மத்தை தெரிந்து பேசினாரா? அல்லது நிதானத்தில் இல்லாமல் உளறினாரா என்று தெரியவில்லை.

உதயநிதி பேச்சிற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் இந்துக்களை ஒழிக்க வேண்டும் என்று கூறவில்லை என மழுப்பலாக பேசி சமாளிக்க முயன்று உள்ளார்.

கிறித்துவத்தை, இஸ்லாத்தை ஒழிப்போம் என்பது கிறித்தவர்களை, முஸ்லிம்களை அல்ல என்று கூறினால் தி.மு.க. தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் ஏற்பாரா? என்பதற்குப் பதில் கூறியாக வேண்டும்.

சனாதனம் என்பது இந்து தர்மத்தை குறிப்பிடுவது. அது இந்துக்களின் நம்பிக்கை, அதனை ஒழிப்போம் என்பது மத வெறுப்பு பிரச்சாரம் தான்.

இந்த கூட்டத்திற்கு அனுமதி அளித்தது தி.மு.க. கூட்டணி கட்சிகள் சேர்ந்து நடத்திய நாடகம். அந்த சட்டவிரோத கூட்டத்தில், அரசியல் சாசன சட்டப்படி பதவி பிரமாணம் எடுத்துக் கொண்ட அமைச்சர்கள் உதயநிதியும் சேகர் பாபுவும் கலந்து கொண்டது சட்டவிரோத செயல்.

சமீபத்தில் மத வெறுப்பு பேச்சின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெளிவாக கருத்து கூறியுள்ளது. காவல்துறை நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும் என தலைமை நீதிபதி கூறியுள்ளார்.

அதன் அடிப்படையில் இந்த கூட்டத்திற்கு அனுமதி அளித்த காவல்துறை அதிகாரிகள் உட்பட அனைவரும் மீதும் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு போட்டு தண்டிக்க வேண்டும்.

சனாதன எதிர்ப்பு ஒழிப்பு என்பது கிறித்துவ மிஷனரிகளின் சூழ்ச்சி திட்டம். கிறித்துவரான உதயநிதி, வெளிநாட்டு கிறித்துவ மிஷனரிகளின் கைப்பாவையாக செயல்படுகிறார் என்றே தோன்றுகிறது.

மேலும் திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி ஆகியோரும் தொடர்ந்து இந்து விரோதமாக பேசி வருகின்றனர்.

இந்து மத வெறுப்பு கருத்துக்களை ஈ.வெ.ரா., அண்ணாதுரை, கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர் எப்படி எல்லாம் பேசி கேவலப்படுத்தினார்கள் என்பதை இந்துக்கள் மறந்திருக்க முடியாது.

ஆட்சியில் இல்லாதபோது அழுது புரண்டு இந்துக்களின் நம்பிக்கைகளை மதிக்கிறோம் என நாடகம் போடுவதும். வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவுடன் வேதாளம் முருங்கை மரம் ஏறியது போல இந்துக்களை கேவலப்படுத்தி பேசுவது இனி நடக்காது. இது நவீன தொழில்நுட்ப காலம். இளைஞர்கள் திராவிட தகிடுதத்தங்களை உணர்ந்து விட்டார்கள்.

அதே சமயம் பொறுப்புள்ள பதவியில் இருப்பவர்கள் மத வெறுப்பு பேச்சு பேசியதன் மீது தமிழக காவல்துறை, இங்குள்ள நீதிமன்றங்கள் நடவடிக்கை எடுக்க தயங்கலாம். ஆனால் மேல் நீதிமன்றத்தில் இவர்கள் தண்டிக்கப் படுவார்கள். மக்கள் மன்றத்திலும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் இந்துக்கள், தி.மு.க. தலைமையிலான கூட்டணியை தோற்கடித்து பாடம் புகட்டுவார்கள்.

இவர்கள் அனைவர் மீதும் இந்து முன்னணியின் ஓர் அணியான இந்து வழக்கறிஞர் முன்னணி புகார் அளித்து வழக்கு தொடரும் எனத் தெரிவித்துக்கொள்கிறோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Entertainment News

Popular Categories