sathur - 2026

சாத்தூர் அருகே அகழாய்வில் சங்கு வளையல்கள், சுடுமண் அச்சு கண்டெடுப்பு!

சற்றுமுன் மதுரை
sathur excacations - 2026
#image_title

சாத்தூர் : விருதுநகர் மாவட்டம் சாத்தூர் – வெம்பக்கோட்டை அருகேயுள்ள விஜயகரிசல்குளம், மேட்டுக்காடு பகுதியில் 2ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை நடைபெற்ற அகழாய்வில் 3 ஆயிரத்து 650க்கும் மேற்பட்ட தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது கருங்கல் சுவர்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்தப் பகுதியில் வசித்த முன்னோர்கள் கருங்கற்களினால் ஆன சுவர்களால் வீடுகள் கட்டி குடியிருந்திருந்ததை அறிய முடிகிறது. மேலும், வெள்ளை மற்றும் நீல நிறத்தினால் ஆன சங்கு வளையல்கள் மற்றும் சங்கு வளையல்களை தயாரிக்க பயன்படுத்தப்படும் சுடுமண் அச்சு ஆகியவையும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இங்கு வாழ்ந்த மனிதர்கள், சங்கு வளையல் தயாரிப்பு கூடம் அமைத்திருப்பதற்கான சான்றுகளாக இவை கிடைத்துள்ளது.
அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை ஆவணப்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.