விபூதியைக் கீழே கொட்டிய விவகாரம்; ஸ்டாலின் மன்னிப்பு கேட்டால் மட்டுமே இனி பசும்பொன்னுக்குள் வரமுடியும்!

Published:

stalin-in-pasumpon
stalin-in-pasumpon

தேவர் பூஜை விபூதியை கீழே கொட்டிய ஸ்டாலினுக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

தேவர் ஜெயந்திக்கு ராமநாதபுரம் சென்ற மு.க.ஸ்டாலின், அங்கு அளிக்கப்பட்ட விபூதியை கீழே கொட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அக்.30இல் ராமநாதபுரத்தில் நடைபெற்ற தேவர் ஜெயந்தியில் கலந்து கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அப்போது அங்கு அவருக்கு விபூதி அளிக்கப்பட்டது. அதை நெற்றியில் பூசாமல் இரு விரல்களில் ஒட்டியிருந்த விபூதியை உரசி உரசி கீழே தட்டிவிட்டு, விரல்களை மட்டும் பெயரளவில் கழுத்தில் தடவிக் கொண்டு, உள்ளங்கையில் இருந்த விபூதியை அப்படியே பிறர் காலில் மிதிபடும் வகையில் கீழே கொட்டி கையைத் தேய் தேய் என்று தேய்த்து தட்டி விட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, மு.க.ஸ்டாலின் ராமநாதபுரம் சென்றபோது #GoBackStalin என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானது. அதை தொடர்ந்து விபூதியை கீழே கொட்டி அவமதித்து விட்டதாக #தேவரை_அவமதித்த_ஸ்டாலின் என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் வைரலானது. தேவர் ஜெயந்தியில் கலந்து கொண்டு ஸ்டாலின் இவ்வாறு நடந்து கொண்டதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இதனிடையே, ஸ்டாலின் தனது செயலுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினால் மட்டுமே இனி பசும்பொன்னுக்குள்
அவர் நுழைய முடியும் என்று ஆப்பநாடு மறவர் சங்கம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!
devar-asso
devar-asso

அந்த கண்டன அறிக்கையில் 30 10 2020 அன்று தெய்வீகத் திருமகன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 113 வது ஜெயந்தி விழாவிற்கு வருகை தந்த திமுக தலைவர் திரு மு க ஸ்டாலின் அவர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது அவற்றை அவர் நெற்றியில் பூசாமல் கையால் துடைத்து கீழே கொட்டிய சம்பவம் தேவர் பெருமகனாரை இழிவுபடுத்தும் செயலாகவே உள்ளது இச்சம்பவம்.

தேவர் அவர்களை தெய்வமாக வணங்கும் அனைத்து தேவர் சமுதாய மக்களும் மு க ஸ்டாலின் அவர்களின் செயல்பாட்டால் மிகுந்த மன வேதனையில் உள்ளனர் எனவே இத்தகைய கீழ்த்தரமான செயலைச் செய்த திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு வன்மையாக கண்டனத்தை பதிவு செய்ததுடன் அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் இல்லை எனில் இனிவரும் காலங்களில் அவரை பசும்பொன்னுக்கு அனுமதிக்கமாட்டோம்… என்று குறிப்பிட்டுள்ளார்

இதனிடையே, தேவர் ஜெயந்தி விழாவில்… ஸ்டாலின் அவமதிப்பு டிவிட்டரில் டிரெண்டிங் ஆனது. சடங்குகளில் நம்பிக்கை இல்லாத ஸ்டாலின் எதற்காக தேவர் ஜெயந்தியில் கலந்து கொள்ள வேண்டும்?… என்று பலரும் கேள்வி எழுப்பினர்.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

தேவர் சிலைக்கு தீபாராதனை செய்து ஸ்டாலினுக்கு தந்த விபூதியை கையில் இருந்து தட்டி ஸ்டாலின் கீழே தள்ளும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. தேவரை அவமதித்த ஸ்டாலின் என்று டிவிட்டரில் டிரெண்டிங் ஆனது.

ஸ்டாலினுக்கு இந்து மத சடங்குகளை வேற்று மத நிகழ்ச்சியில் அவதூறாக பேசுவது…. இந்து பெண்களை அவதூறாக பேசிய திருமாவளவனுக்கு ஆதரவாக பேசுவது… கறுப்பர் கூட்டத்திற்கு கண்டனம் தெரிவிக்காத ஸ்டாலின்… இப்படி எந்த ஒரு விதத்திலும் இந்து மதத்திற்கு எதிராக இருக்கும் ஸ்டாலின் தேவர் ஜெயந்தியில் ஏன் கலந்து கொள்ள வேண்டும்?….

இன்று மக்கள் மத்தியில் தேவரை அவமதித்த ஸ்டாலின் என்று விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளார்… ஆக, ஸ்டாலின் தமிழக முதல்வராக முடியாது என்பது மட்டுமல்ல…. முதல்வராக கனவு கூட காண முடியாது…. என்று டிவிட்டர் பதிவுகளில் கருத்து தெரிவித்துள்ளனர்.

தேவர் நினைவிடத்தில் விபூதியை கீழே போட்ட ஸ்டாலின்…. நோன்பு கஞ்சியை கீழே ஊத்துவாரா?? கிறிஸ்துமஸ் கேக்கை வாங்க மறுப்பாரா? உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் அங்கு ஏன் வணங்க போக வேண்டும்… இந்துக்களின் விரோதி திமுக என்றால் இல்லை என்று மறுக்கும் திமுகவினர் இதற்கு பதில் சொல்வார்களா? என்றும் இதற்கு கேள்வி எழுப்பிவருகின்றனர் சமூகத் தளங்களில்!

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

Related articles

Recent articles

spot_img