
திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், ஆசிரியர் தினம் மற்றும் அரசஞ்சண்முகனார் பிறந்தநாள் விழா சிறப்புச் சொற்பொழிவு!
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே,
திருவேடகம், விவேகானந்த கல்லூரியில், ஆசிரியர் தினம் மற்றும் அரசஞ்சண்முகனார் பிறந்தநாள் விழா சிறப்புச் சொற்பொழிவு கல்லூரி இறை வழிபாட்டுக் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வைத், தமிழ்த்துறை ஏற்பாடு செய்திருந்தது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.
கல்லூரியின் செயலர் சுவாமி வேதானந்த மற்றும் கல்லூரியின் குலபதி சுவாமி அத்யாத்மானந்த ஆசி உரையாற்றினர். தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் வ.க.ராமகிருஷ்ணன் வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் தி.வெங்கடேசன் தலைமை உரையாற்றினார்.
தியாகராசர் கல்லூரியின் மேனாள் முதல்வரும் தலைசால் பேராசிரியருமான முனைவர் மு.அருணகிரி, ஆசிரியர் மாணவர் உறவு என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மதுரை தியாகராசர்கல்லூரித் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் த.முத்தமிழ் , அரசஞ்சண்முகனாரின் பன்முக ஆளுமை என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் கு.இராமர் நன்றி கூறினார். தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்கள் முனைவர் கோ.பாலமுருகன் சு.முத்தையா, முனைவர் ரெ.சுதாகர் வடிவேலு ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். பேராசிரியர்கள் மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.