
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த பயங்கர வெடி விபத்து
8 பெண்கள் உட்பட 10 தொழிலாளர்கள் உடல் சிதறி பலி யான் நிலையில் மேலும் மூவர் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இன்று சிவகாசி அருகே மேலும் ஒரு பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் பலியானார்.
சிவகாசி அருகே தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 8 பெண் தொழிலாளர்கள் உடப்ட 10 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர், . தற்போது மேலும் மூவர் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகாசி அருகே உள்ளது ரெங்கபாளையம். இங்கு சுந்தரமூர்த்தி என்பவருக்கு சொந்தமான கனிஷ்கர் பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையின் வளாகளததில் ஏற்கனவே தயார் செய்யப்பட்ட பட்டாசுகளை சோதனை செய்ததாக கூறப்படுகிறது. அப்போது. திடீரென தீயானது பட்டாசு தயார் செய்யும் பகுதிக்கு சென்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது,
தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை பிற பகுதிகளுக்கு செல்லவிடாமல் போராடி தடுத்து நிறுத்தினர்.
10 பேர் பலி – இந்த மேற்படி வெடி விபத்தில் அழகாபுரி காந்தி நகரைச் சேர்ந்த முனியப்பன் மனைவி அனிதா (40),
லட்சுமியாபுரம் பகுதியச் சேர்ந்த ஜெயமுருகன் மனைவி பாக்கியம் (35), அதே பகுதியைச் சேர்ந்த சுப்புக்கனி மனைவி குருவம்மாள்(55), வடக்கு அழகாபுரியைச் சேர்ந்த சீனிராஜ் மனைவி மகாதேவி(50), அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜ் மனைவி பஞ்வர்ணம்(35), முத்துராஜ் மகன் பாலமுருகன்(30), தாளமுத்து என்பவர் மனைவி தமிழ்ச்செல்வி(55), எஸ்.அம்மாபட்டியைச் சேர்ந்த முத்துராஜ் மனைவி முனீஸ்வரி(32), செவலுர் அசேபா காலனியைச் சேர்ந்த மகேந்திரன் தங்கமலை (33), லட்சுமியாபுரத்தைச் சேர்ந்த முருகானந்தம் மனைவி இந்திரா (50) ஆகியோர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
படுகாயம் – இந்த விபத்தில் அழகாபுரியைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி பொன்னுத்தாயி(45). கிருஷ்ணன்கோவில் சமத்துவபுரத்தைச் சேர்ந்த சங்கர் மனைவி சின்னத்தாய்(34) ஆகியோர் படுகாயமடைந்தனர், இவர் இருவரும் திருவில்லிபுத்துர் அரசு மருத்துவமனையில் கிசிச்சை பெற்று வருகின்றனர்,
எஸ்,பி ஆய்வு – விபத்து நடைபெற்ற பட்டாசு ஆலையில் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் ஆய்வு மேற்கொண்டார்.
ரூ,10லட்சம் நிவாரணம் வழங்கிடுக சிஐடியு அறிக்கை – இந்த விபத்து குறித்து சிஐடியுவின் விருதுநகர் மாவட்டச் செயலாளர் பி.என்,தேவா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியதாவது –
சிவகாசியில் கிச்சநhயக்கன்பட்டி மற்றும் ரெக்ஙபாளையம் பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 10 தொழிலாளர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்,
உயிரிழந்த அனைத்து தொழிலாளர் குடும்பங்களுக்கும் சிஐடியு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது, அதே நேரத்தில் பட்டாசு ஆலை நிர்வாகங்கள் தொடர்ந்து பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்கப்படாத காரணத்தால் இந்தகோர விபத்து நடைபெற்றுள்ளது.
அதாவது உயிரிழந்த தொழிலாளர்கள் கிட்டத்தட்ட படுகொலைசெய்யப்பட்டிருக்கிறார்கள் என்றே கூற வேண்டிய நிலை உள்ளது, இந்த கொடூர விபத்தில் காயம் அடைந்தவர்கள் வெகு விரைவில் குணமடைய வேண்டுகிறோம், மேலும் விபத்துக்கு காரணமான பட்டாசு ஆலை நிர்வாகத்தினர் மற்றும இதை முறையாக ஆய்வு செய்யாத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
மேலும் உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ,10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். பட்டாசு ஆலை நிர்வாகமும் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குவதை அரசு அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என சிஐடியு/விருதுநகர் மாவட்ட பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர் சங்கம் வலியுறுத்துகிறது,
மேலும் 3 பேர் மரணம் – அம்மபாட்டியைச் சேர்ந்த காளிராஜன் மனைவி லட்சுமி(28), மூவரைவென்றான் பகுதியச் சேர்ந்த முனியாண்டி மனைவி செல்லம்மாள்(40) மற்றும் குருகலாஞ்சி என்பவர் மனைவி முத்துலட்சுமி(36) ஆகியோர் உயிரிழந்தது தற்போது தெரிய வந்தது.
சிவகாசி அருகே மேலும் ஒரு பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் பலி..
சிவகாசி அருகே உள்ள கிச்சநாயக்கன்பட்டியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்,
சிவகாசி அருகே உள்ளது கிச்சநாயக்கன்பட்டி. இங்கு திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த பார்த்தீபன் என்பவருக்கு சொந்தமான ஆர்யா பட்டாசு ஆலை உள்ளது. இங்கு வழக்கம் போல தொழிலாளர் பட்டாசுகளை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது. திடீரென ஏற்பட்ட உராய்வு காரணமாக திடீரென தீ விபத் துஏற்பட்டது. இதில் வெம்பக்கோட்டை அருகே உள்ள நதிக்குடி கிராமத்தைச் சேர்ந்த பிச்சாண்டி என்பவரது மகன் வேம்பு(60) பலியாகினார்.