கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம்: குமரி மீனவர்களுக்கு எச்சரிக்கை

Published:

fishermen - 2026

குமரிக்கடல், மாலத்தீவு ஆகிய பகுதிகளுக்கு இடையே வலுவான குறைந்தழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதால் மீனவர்கள் வரும் 15ஆம் தேதி வரை கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேலும் திருவனந்தபுரம், கன்னியாகுமரி பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்றும் அதாவது குறைந்தபட்சம் மணிக்கு 60 கிமீ வேகம் வரை காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் அவசிய தேவை இருந்தால் அன்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் லட்சத்தீவு பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்வதை மீனவர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் இந்த அறிவுறுத்தலை பின்பற்ற வேண்டும் என்றும் வானிலை மையம் கேட்டுக்கொண்டுள்ளது

Related articles

Recent articles

spot_img