2018-2019ஆண்டின் தமிழக பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்

Published:

budget2 - 2026

2018-2019ஆம் ஆண்டின் தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ,பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

2018-19ல் அரசின் வருவாய் ரூ1.76 லட்சம் கோடியாக இருக்கும்
தமிழகத்தின் பொருளாதாரம் 9% ஆக உயரும்
தமிழகத்தின் வருவாய் ரூ1.76 லட்சம் கோடி
தமிழக அரசின் செலவு ரூ2.04 லட்சம் கோடி
மலை சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ75 கோடி
நகர்ப்புற மேம்பாட்டுக்கு ரூ300 கோடி ஒதுக்கீடு
வடசென்னைக்கான வெள்ள தடுப்பு மேலாண்மைக்கு ரூ.3,243 கோடியில் திட்டம் தயாரிப்பு
ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற ரூ.20 கோடி
வேளாண் துறைக்கு ரூ.8,916.25 கோடி ஒதுக்கீடு
காவல்துறைக்கு ரூ.7,877 கோடி ஒதுக்கீடு
காவல்துறைக்காக 35 கட்டடங்கள், 15 காவல் நிலையங்கள், 543 குடியிருப்புகள் கட்டப்படும்
நலிந்த கலைஞர்களுக்கு மாதாந்திர நிதி ரூ.1500-லிருந்து, ரூ.2 ஆயிரமாக உயர்வு
தஞ்சை தமிழ் பல்கலை.யில் தமிழ் மொழி விரிவாக்க மையம் உருவாக்கப்பட்டு, ஆண்டு மானியமாக ரூ.2 கோடி
2018-2019 ஆம் ஆண்டில் போக்குவரத்து கழகத்திற்கு 3,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும்
தனியார் நிலங்களை கையகப்படுத்தி ஏழைகளுக்கு இலவசமாக வீட்டுமனைப்பட்டா வழங்கப்படும்
குமரி மாவட்ட தேங்காய்ப்பட்டினத்தில் மீன்பிடித்துறைமுகம், மீன் பதப்படுத்தும் பூங்கா
மானியம், உதவித்தொகை ஒதுக்கீடு ரூ, 75,723 கோடி
நபார்டு வங்கி உதவியுடன், ரூ.200 கோடியில் 70 ரயில்வே மேம்பாலங்கள்
கடலூர், மங்களூரில் மக்காச்சோளம் பதப்படுத்தும் அலகு
தீயணைப்பு, மீட்பு பணிகள் துறைக்கு ரூ.347.59 கோடி ஒதுக்கீடு

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

Related articles

Recent articles

spot_img