பொதுவாக இறைநம்பிக்கை உள்ள அனைவரின் இல்லத்திலும் விநாயகர் படங்கள் இல்லாமல் இருக்காது. முன்பெல்லாம் விநாயகர், லட்சுமி, சரஸ்வதி என மூவரும் உள்ள படங்களை வீட்டில் வைத்திருப்பார்கள். அதன் பிறகு முருகன், குடும்ப சகித சிவன், வெங்கடாஜலபதி என்று பல படங்கள் இடம்பெற ஆரம்பித்தது. இப்போதெல்லாம் வியாபார யுக்தியாக சகட்டு மேனிக்கு படங்களை வரைந்து விற்பனைக்கு வைக்கிறார்கள். நம்மவர்களும் அதை வாங்கிக் கொண்டு போய் வீட்டில் வைத்து விடுகிறார்கள். யந்திர வழிபாடு நலம் தருபவை. இப்போதெல்லாம் எந்த பிரசித்தி பெற்ற ஸ்தலங்களுக்கு சென்றால் மலிவு விலை யந்திரங்கள் பாக்கெட் வடிவில் விற்பனை செய்யப்படுகிறது. இதையும் வாங்கி வந்து வீடுகளில் அடைத்து விடுகிறார்கள். முறையாக பூஜிக்க முடியாவிட்டால் யந்திரங்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும்.



