தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. புத்தாண்டில் வரும் நற்செய்திகள் என்ன என்பதைப் பார்க்கும் முன், தற்போதைய நிலவரம் என்ன என்பதைப் பார்ப்போம்.
உங்கள் மனதில் ஏராளமான எதிர்பார்ப்பு இருக்கிறது. கடந்த சில மாதங்களாக பலமான யோசனை வருகிறது. உங்களை அசைத்து பார்க்கிற அளவிற்கு எதுவும் நடந்து விடவில்லை. ஆனாலும் மனதில் ஒரு குழப்பம் தயக்கம் இருக்கிறது. அது எதனால் என்பதை கண்டறிய முடியவில்லை. காரணமும் தெரியவில்லை. தேவையற்ற வீண் பயம் என உள்மனம் சொல்கிறது. இருந்தாலும் மீண்டும் மீண்டும் மனம் தடுமாடுகிறது. முதற்கோணல் முற்றும் கோணல் என்கிற கதையாக எதுவும் இல்லை. இழப்புகள், ஏளங்கள், எதிர்ப்புகள் இல்லை. ஆனால் நடுநிசி தாண்டியும் தூக்கம் வரவில்லை. இதற்கெல்லாம் காரணம் சனிபகவான். ஏழரைச்சனியாக வந்திருக்கிறார். வந்தவுடன் ஏடாகூடமாக செய்கிற பழக்கம் இல்லாதவர். ஆனாலும் அதன் அதிர்வுகளை தருவார். அந்த அதிர்வுதான் உங்களை காட்டுக்கும் மேட்டிற்கும் இழுக்கும் குழப்பமான நிலை. என்றாலும் ஒரு சுபசெய்தி. தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14. ஏப்ரல் 24ல் சனிபகவான் வாக்கிய கணித ரீதியில் வக்கிரமாகிறார். அதனால் தமிழ் புத்தாண்டில் அதற்கு விடை கிடைக்குமா என்பதைப் பார்ப்போம்.
மகர ராசி தமிழ் புத்தாண்டு பலன்கள் | விளம்பி 2018-2019
Popular Categories



