குருபகவானின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். குறைவில்லாதவர்கள். மண்ணில் கிடந்தாலும் மாணிக்கமாக ஜொலிப்பவர்கள். தன்னம்பிக்கை நிறைந்தவர்கள். தற்பெருமை இல்லாதவர்கள். தனிமனித பண்பில் தனித்துவம் நிறைந்தவர்கள். அன்புக்கும் பண்புக்கும் கட்டுப்பட்டவர்கள். அதிகார தொனி இல்லாதவர்கள். எதிரிகளை கூட அன்பால் வசப்படுத்துகிறவர்கள். உங்கள் பலமே மூளைதான். மூளைபலமே உங்களை முன்னுக்கு கொண்டு வரும். எதிர்மறை சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காதவர்கள். முயன்றால் முடியும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை உள்ளவர்கள். சாதித்தும் காட்டுவீர்கள். குருபகவானின் ஆதிக்கத்தில் பிறந்ததால் குறைகளை கூட நிறைகளாக்குவீர்கள். யாரையும் குற்றம் சொல்வதில்லை. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பதை உணர்ந்தவர்கள். ஆசைகளுக்கு அலைமோதுவதில்லை. நமக்கு வரவேண்டியது வரும், அது வரவேண்டிய நேரத்தில் வரும் என்று அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளவர்கள். பல சமயம் அது உண்மையாகிப் போகும். இன்னும் சொல்ல ஆசைதான். ராசியன் குணாதிசயங்கள் என்ற பதிவு இரண்டே ராசியோடு நின்று கொண்டிருக்கிறது. அது சொல்லும்போது அதிகம் சொல்வேன். சரி… தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. இந்த புத்தாண்டில் எதிர்கொள்ளப் போகும் பலாபலன்கள் என்ன என்பதை பார்ப்போம். அதற்கு முன் தற்போதைய நிலவரம்.



