சென்னை:
தமிழக அரசின் அடுத்த நிதி ஆண்டுக்கான நிதி நிலைஅறிக்கையினை தாக்கல் செய்து வருகிறார் மாநில நிதி அமைச்சரும் துணைமுதல்வருமான ஓ.பன்னீர்செல்வம்.
இன்று காலை தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கியது. இதில் தமிழக அரசின் வருவாய் ரூ.1.76 லட்சம் கோடி எனவும் செலவு ரூ.1.91 லட்சம் கோடியாக இருக்கும் எனவும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இந்த பட்ஜெட்டில் கூறியுள்ளார்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக அரசின் 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தமிழக அரசின் வருவாய் ரூ. 1.81 லட்சம் கோடி,செலவு ரூ. 2. 04 லட்சம் கோடி, பற்றாக்குறை ரூ. 23 ஆயிரத்து 176 கோடி என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. நலிந்த கலைஞர்களுக்கு மாதாந்திர நிதி ரூ.1500-லிருந்து, ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ரூ. 48 கோடி செலவில் மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையங்கள் மேம்படுத்தப்படும் என்றும் விருதுநகர், காஞ்சிபுரம், திருப்பத்தூர், ராமநாதபுரம் அரசு மருத்துவமனைகளில் ரூ. 80 கோடியில் மகப்பேறு மையங்கள் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
தமிழக நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்து அவர் கூறிவது…
2018 1- 19 தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதமாக இருக்கும்.
தமிழக அரசின் வருவாய் ரூ.1.76 லட்சம் கோடியாகவும், செலவு ரூ.1.91 லட்சம் கோடியாகவும் இருக்கும். வருவாய் பற்றாக்குறை ரூ.17,490 கோடியாகவும் இருக்கும்.
மானியம் உதவித்தொகைக்கு ரூ.75, 723 கோடி ஒதுக்கீடு
மாநில வளர்ச்சி நிதியத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு
போலீஸ் துறைக்கு ரூ.7,877 கோடி நிதி ஒதுக்கீடு
சம்பள செலவினங்களுக்கு 52,171 கோடி
மத்திய வரிகளில் தமிழகத்திற்கான பங்கு ரூ.31,707 கோடியாக இருக்கும்
வட சென்னை மாவட்ட வெள்ள தடுப்புக்கு ரூ.3,243 கோடியில் திட்டம்
3 லட்சம் இலவச வீட்டுமனை பட்டா வழங்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
ரூ. 48 கோடி செலவில் மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையங்கள் :