திருக்கோயில்கள்-81 நூல் வெளியீடு!

Published:

thirukkoilkal 81 book release - 2026

எழுத்தாளர் ஜெயஸ்ரீ எம். சாரி எழுதிய ‘திருக்கோயில்கள் -81’ என்ற நூல் அண்மையில் வெளியிடப்பட்டது. நூலாசிரியரின் தந்தையான, பணி நிறைவு பெற்ற இந்து சமய ஆட்சித்துறை கண்காணிப்பாளர் என். திருமலை அவர்களின் சதாபிஷேக நிகழ்ச்சியில் இந்த நூல் வெளியிடப்பட்டது.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆச்சார்யா லெக்ஷ்மிநாராயணன் (நிறுவனர், இயக்குனர், விஷ்வக்ஷேமா ட்ரஸ்ட், பேலகுளா, கர்நாடகா) நூலை வெளியிட, ரெ. முரளி (ஆசிரியர், இலக்கியச் சாரல்) முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.
ஜெயஸ்ரீ சாரி தமிழில் எழுதிய மூன்றாவது நூல் இது.

‘திருக்கோயில்கள் – 81’ பற்றி அவர் கூறுகையில், “என் தந்தையாரிடமிருந்து அவர் பணிபுரிந்த கோயில்களைப் பற்றியும், அவருக்கு பிடித்த கோயில்களையும் பற்றியும் தகவல்களை சேகரித்து ( தென் தமிழக கோயில்கள்), மொத்தமாக 81 கோயில்களைப் பற்றி ஒரு நூலாக எழுதியுள்ளேன். அந்த நூல் என் தந்தையாரின் சதாபிஷேகத்தன்று வெளியீடு கண்டுள்ளது. என் பெற்றோர் ந. திருமலை – தி. விஜயலெக்ஷ்மி, உறவினரகள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இந்நூலை வெளியிட்டதில் மகிழ்ச்சி. இதன என் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்” என்றார்.

ALSO READ:  வித்யா ததாதி விநயம்! பணிவே வெற்றியாளரின் உன்னதப் பண்பு!

ந. வரதராஜன் (இளநிலை நிர்வாக அதிகாரி -பணி நிறைவு, மருத்துவத்துறை மற்றும் ஊரக நலப்பணிகள், இயக்குனர் அலுவலகம், தேனாம்பேட்டை), இந்து சமய ஆட்சித்துறை பணி நிறைவு பெற்ற எஸ். ஜெயராமன் (இணை ஆணையர்), என்.எல். ஸ்ரீதரன் (உதவி ஆணையர்), வெங்கடேஸ்வரன், (உதவி ஆணையர்), நடராஜன், எஸ். சம்மந்தம், எஸ். சுந்தராஜன், பி.ஜி. ஸ்ரீநிவாஸன், ராஜகோபால் (கண்காணிப்பாளர்கள்), அறவாழி (நிர்வாக அதிகாரி), ஆர். கணேசன் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

Related articles

Recent articles

spot_img