acchankovil sastha temple kodiyetram - 2026

அச்சன்கோவிலில் மண்டல பூஜை தொடக்கம்!

ஆன்மிகச் செய்திகள் இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
acchankovil sastha temple kodiyetram - 2026

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை வழிபாடு இன்று துவங்கியதை அடுத்து இன்று சபரிமலை ஐயப்பனின் படைவீடு கோவில்களான அச்சன்கோவிலிலும் பாக்கு மரத்தை வெட்டி கொடியேற்றி மண்டல பூஜை வழிபாடு துவங்கியது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கேரள மாநிலம் அச்சன்கோவில் மிகப் பிரபலமானது. இங்கு ஐயப்பனின் படை வீடு கோவில் உள்ளது. தர்மசாஸ்தா கோவிலில் சாஸ்தா அரசனாக அருள்பாலித்து வருகிறார்.

சபரிமலையில் 41 நாள் மண்டல பூஜை துவங்கி நடப்பது போல் இங்கும் கார்த்திகை ஒன்று முதல் 41 நாள் மண்டல பூஜை வழிபாடு துவங்கி நடைபெறும். இன்று அதிகாலை கோவில் நடை 5 மணிக்கு திறந்ததும் மூலவர் அச்சங்கோவில் தர்மசாஸ்தாவுக்கு அஷ்டோபிசேகம் நடத்தி சிறப்பு பூஜை வழிபாடுகள் நடந்தது.

ALSO READ:  தொடரும் தெய்வத்திருமேனிகள் திருட்டு; இந்து முன்னணி கண்டனம்!

கோவில் முன்பு உள்ள திடலில் வனப்பகுதியில் இருந்து வெட்டிவரப்பட்ட பாக்கு மரத்தை நட்டு தந்தரி மற்றும் மேல் சாந்தி பூஜை நடத்தி கொடியேற்றி மண்டல கால பூஜை வழிபாடுகளைத் துலுக்கினார்.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இருமுடி கட்டி வருவது போல் இக்கோவிற்கும் பக்தர்கள் இருமுடி கட்டி வருவது குறிப்பிடத்தக்கது. சபரிமலையில் நடைபெறும் பத்து நாள் ஆறாட்டு உத்ஸவம் போல் இக்கோவிலிலும் நடைபெறுவது சிறப்பம்சம்.

இந்த ஆண்டு ஆறாட்டு உத்ஸவம் வரும் டிசம்பர் 17ஆம் தேதி தொடங்குவதை அடுத்து டிசம்பர் 17ஆம் தேதி அச்சன்கோவில் தர்ம சாஸ்தாவுக்கு திருவாபரணங்கள் அணிவித்து சிறப்பு பூஜை வழிபாடுகள் வெகு விமர்சையாக நடைபெறும்.

இதற்காக டிசம்பர் 16ஆம் தேதி புனலூர் கருவூலத்திலிருந்து திருவாபரணங்கள் ஊர்வலமாக செங்கோட்டை தென்காசி பண்பொழி வழியாக அச்சன்கோவிலுக்கு எடுத்து வரும் நிகழ்வு பக்தி பூர்வமாக நடைபெறும். டிசம்பர் 17ஆம் தேதி அச்சன்கோவில் முன்பு உள்ள தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றி பத்து நாள் உத்ஸவம் தொடங்கி நடைபெறும்.

ALSO READ:  இந்து வணிகர் தின விழா கொண்டாட்டம்!

திருவிழாவில் முக்கிய நிகழ்வாக, வரும் டிசம்பர் 23ஆம் தேதி அன்னக்கொடி வரவேற்பு நிகழ்வு டிசம்பர் 25ஆம் தேதி திருத்தேரோட்டமும் டிசம்பர் 26 அன்று ஆறாட்டு விழாவும் வெகு விமர்சையாக நடைபெறும். பத்து நாள் திருவிழாவிலும் இரவு சுவாமி வாகனத்தில் வீதி உலாவும் பேட்டைத் துள்ளும் கருப்பந்துள்ளல் விமர்சையாக நடைபெறும்.

Posts by Sakthi Paramasivan.k:

Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam