railway news - 2026

நெல்லை வழி எழும்பூர்-தென்காசி சிறப்பு ரயிலில் முன்பதிவு செய்யலாம்!

நெல்லை சற்றுமுன் தமிழகம் பொது தகவல்கள்
railway news - 2026
#image_title

சென்னை எழும்பூர் – நெல்லை – தென்காசி ஒருவழி அதிவிரைவு சிறப்பு ரயில் (06015) — நவம்பர் 20, 2026 வெள்ளிக்கிழமை புறப்பட்டு தென்காசி சனிக்கிழமை சென்றடையும்

​பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கத் தெற்கு ரயில்வே சென்னை எழும்பூர் – தென்காசி ஒருவழி அதிவிரைவு சிறப்பு ரயிலை (One-way Superfast Special – 06015) அறிவித்துள்ளது. இந்த ரயிலுக்கான முன்பதிவு (Advance Reservation) தற்போது திறக்கப்பட்டுள்ளது!

​
​ரயில் எண் 06015 (சென்னை எழும்பூர் – தென்காசி): வரும் நவம்பர் 20, 2026 (வெள்ளிக்கிழமை) இரவு 23:50 மணிக்குச் சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் சனிக்கிழமை மதியம் 12:30 மணிக்குத் தென்காசியைச் சென்றடையும்.

​
இந்த ரயில் நவம்பர் 20 (வெள்ளிக்கிழமை) இரவு 23:50 மணிக்குப் புறப்படுவதால், தாம்பரத்தைக் கடந்து (00:30 மணி) செல்லும் வழித்தடங்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்யும்போது மறுநாள் தேதியை (நவம்பர் 21 – சனிக்கிழமை) கவனமாகத் தேர்ந்தெடுத்து முன்பதிவு செய்யுமாறு பயணிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

?இந்த ரயிலில்
1 ஏசி டூ-டியர் (AC 2-Tier), 3 ஏசி த்ரீ-டியர் (AC 3-Tier), 10 ஸ்லீப்பர் (Sleeper), 2 முன்பதிவில்லாத பொதுப்பெட்டிகள் (General Second Class) மற்றும் 2 லக்கேஜ் கம் பிரேக் வேன்கள்.

ALSO READ:  தீபாவளிக்காக சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு!

​
​சென்னை எழும்பூரில் 23:50 (வெள்ளி) புறப்பட்டு
​தாம்பரம்: 00:30 / 00:32 (சனி)
​செங்கல்பட்டு: 01:00 / 01:02
​மேல்மருவத்தூர்: 01:25 / 01:27
​விழுப்புரம்: 02:30 / 02:35
​விருத்தாசலம்: 03:20 / 03:22
​அரியலூர்: 04:03 / 04:05
​ஸ்ரீரங்கம்: 04:58 / 05:00
​திருச்சிராப்பள்ளி: 05:35 / 05:40
​திண்டுக்கல்: 06:38 / 06:40
​கொடைக்கானல் ரோடு: 06:56 / 06:58
​மதுரை: 08:00 / 08:10
​விருதுநகர்: 08:43 / 08:45
​சாத்தூர்: 09:03 / 09:05
​கோவில்பட்டி: 09:23 / 09:25
​திருநெல்வேலி: 10:25 / 10:30
​சேரன்மகாதேவி: 10:50 / 10:51
கல்லிடைக்குறிச்சி: 11:00 / 11:01
அம்பாசமுத்திரம்: 11:06 / 11:07
கீழக்கடையம்: 11:25 / 11:26
​பாவூர்சத்திரம்: 11:35 / 11:36
​தென்காசி: 12:30 (சனி)

​முன்பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்டதால், திருச்சி, மதுரை, நெல்லை மற்றும் தென்காசி மார்க்கமாகச் செல்லும் பயணிகள் உடனடியாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பயனடையலாம்.

Posts by Sakthi Paramasivan.k:

ALSO READ:  ஸ்ரீரங்கம் கோயில் ஜீயர் நியமனத்தில் அறநிலையத் துறைக்கு அதிகாரம் இல்லை!
Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam