தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற பொருட்களை விற்பனை செய்ய அனுமதித்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த ஊழல் புகார் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன், சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கை தொடர்ந்தார்.
இந்த வழக்கின் நிறைவு பெற்ற நிலையில், சுமார் 3 மாதத்திற்கு பிறகு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, குட்கா ஊழல் தொடர்பான விசாரணையை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு பிறப்பித்தனர். குட்கா விவகாரத்தில் மக்களுக்கு உண்மை நிலை தெரியவேண்டும். குட்கா தொடர்பாக போதிய விளம்பரம் செய்து மக்களிடம் தகவல் பெற வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்



