ரஜினிகாந்த் படத்தில் விஜய்சேதுபதி: வில்லனா? வித்தியாசமான வேடமா?

Published:

rajini vijaysethupathi2 - 2026இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் அடுத்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தில் தற்போது விஜய்சேதுபதியும் இணைந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பீட்சா, ஜிகர்தண்டா மற்றும் இறைவி ஆகிய மூன்று படங்களில் நடித்த விஜய்சேதுபதி தற்போது 4வது முறையாக மீண்டும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் விஜய்சேதுபதி, வில்லனாக நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும் ரஜினி-விஜய்சேதுபதி முதல்முறையாக இணைந்துள்ளதால் இந்த படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான படமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

Related articles

Recent articles

spot_img