இதுக்கு எண்டே இல்லையா?… இந்த படமும் ஓடிடியிலா?.. அதிர்ச்சியான ரசிகர்கள்…

Published:

laabam

எப்போது கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதோ அப்போதிலிருந்து ஓடிடி எனப்படும் இணையதளம் மற்றும் ஆப்களில் புதிய திரைப்படங்கள் வெளியாவது துவங்கிவிட்டது. குறிப்பாக தமிழ் சினிமாவில் சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படம் ஒடிடியில் நல்ல வரவேற்பை பெற்று அதிக லாபத்தை கொடுத்துள்ளது.

எனவே, தற்போது தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ள நிலையிலும், முன்னணி நடிகர்கள் தங்கள் படத்தை ஓடிடியில் வெளியிடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். அதற்கு 2 காரணங்கள் இருக்கிறது. முதல் காரணம், கொரோனா பரவல் காரணமாக தற்போது தியேட்டர்களில் படம் பார்க்க அதிக ரசிகர்கள் வருவதில்லை. ஒரு பக்கம் அமேசான், நெட்பிளிக்ஸ் போன்ற ஓடிடி நிறுவனங்களில் படத்தை வெளியிடும்போது தயாரிப்பாளருக்கு நல்ல லாபமும் கிடைக்கிறது என்பதுதான்..

laabam

இந்நிலையில், ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி தயாரித்து நடித்து வந்த லாபம் திரைப்படம் நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளது. இந்த தகவலை விஜய்சேதுபதியே தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

Source: Vellithirai News

Related articles

Recent articles

spot_img