சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படம் இன்னும் ஒருசில மணி நேரங்களில் வெளிநாடுகளிலும் நாளை முதல் இந்தியாவிலும் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதால் மிகப்பெரிய ஓப்பனிங் வசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இன்னும் ஒருசில நாட்களில் ரஜினியின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. முதல்கட்ட படப்பிடிப்பு இமயமலை அருகே உள்ள டார்ஜிலிங் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் நடைபெறவுள்ளதாகவும், இந்த படத்தில் ரஜினி பேராசிரியராக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.