
தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்கும் தீய சக்திகளை தமிழக அரசு ஒடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் சார்பில் காடேஸ்வரா சுப்பிரமணியன் விடுத்துள்ள அறிக்கை:
கடந்த சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடியில் நடந்த சம்பவங்களால் பாதிக்கப்பட்ட மக்களை ரஜினி காந்த் சந்தித்தார். அதன் பின், பத்திரிகையாளர்கள் சந்திப்பில், ஒரு தேசியவாதியாக, கலவரங்களுக்கு பின்னணியில் இருந்தவர்கள் நக்சல் பயங்கரவாதிகள், சமூக விரோதிகள் என்று பகிரங்கமாக கூறினார்.
தூத்துக்குடி சம்பவம் பற்றி ரஜினிகாந்த் கூறிய கருத்தை இந்து முன்னணி பேரியக்கம் வரவேற்று, பாராட்டுத் தெரிவித்தது.
ரஜினிகாந்த்தின் இந்தக் கருத்தினைப் பொறுத்துக்கொள்ள இயலாத தேசவிரோத சக்திகள், சமூக விரோத அமைப்புகள், நாளை வெளியாகும் அவருடைய திரைப் படத்தை வெளிவராமல் தடுப்பதற்கான பல்வேறு முயற்சிகளை செய்வதாக தெரிகிறது.
கர்நாடகத்தில் தன்னுடைய காலா படம் வெளிவர வேண்டும் என்பதற்காக ரஜினிகாந்த் கன்னடர்களிடத்திலே மண்டியிட்டுவிட்டார் எனப் பொய்ப் பிரச்சாரங்களை, விஷமத்தனமாக திரித்து வெளியிட்டு வருகிறார்கள்
தேசியவாதியான ரஜினிகாந்த் அவர்களுக்கு மிரட்டல் விடுத்திருப்பதுடன், அவருடைய திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட போவதாக அறிவித்திருப்பது கண்டனத்திற்குரியது.
தமிழக காவல்துறை, ரஜினிகாந்த் அவர்களுக்கு தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும், அதேபோல நாளை திரைப்படம் வெளிவரக் கூடிய நிலையில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வண்ணம் திரையரங்குகளுக்குப் பாதுகாப்பு முன்னேற்பாடு நடவடிக்கைகளை செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
தேவை ஏற்பட்டால் இந்து முன்னணி தொண்டர்கள் நாளை வெளிவரும் காலா திரைப்பட வெளியீட்டிற்கு தக்க பாதுகாப்பு அளிப்பார்கள் என்று இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம் .
தமிழகத்தில் தொடர்ந்து போராட்டம் போராட்டம் என மக்களை நிம்மதியாக வியாபாரமோ, தொழிலோ, பிரயாணமோ செய்ய முடியாத நிலையை ஏற்படுத்தி வருகின்றனர்.
மக்களிடம் தவறான செய்திகளை கொண்டு சென்று பதட்டத்தை ஏற்படுத்தும், சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் சமூக விரோதிகளை, தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என இந்து முன்னணிக் கேட்டுக்கொள்கிறது.




இநà¯à®¤ கà¯à®®à¯à®ªà®²à¯ˆ ஒடà¯à®•à¯à®•ாமல௠ஒழிதà¯à®¤à¯ விடவேணà¯à®Ÿà¯à®®à¯.