ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் இன்று திரிபுராவிற்கு பயணம் செய்கிறார். விமானப்படை சிறப்பு விமானத்தில் செல்லும் அவர் இன்று காலை 11 மணியளவில் அம்மாநிலத்தில் உள்ள உதய்பூர் சென்றடைகிறார். அங்கு, சப்ரூம் – உதய்பூர் இடையே புதிதாக போடப்பட்டுள்ள இருவழி தேசிய நெடுஞ்சாலையை திறந்து வைக்க உள்ளார்.
இதைத்தொடர்ந்து, அங்குள்ள மாதா திரிபுரேஷ்வரி கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்யும் ராம் நாத் கோவிந்த் நாளை காலை டெல்லி திரும்புகிறார். ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ராம் நாத் கோவிந்த் திரிபுராவிற்கு முதல் முறை பயணம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.