ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி வைகோ தொடர்ந்த வழக்கை, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வரும் ஜூன் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
ஸ்டெர்லைட் ஆலையின் முதல் யூனிட் செயல்படவில்லை. இரண்டாவது யூனிட்டுக்கு அனுமதி வழங்கவில்லை என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கும், ஆலையை விரிவாக்கம் செய்வதற்கும் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்
மதுரை ஐகோர்ட்டில் அவர் தாக்கல் செய்த மனுவில், தூத்துக்குடி மீளவிட்டான்
பகுதியில் ஸ்டெர்லைட் ஆலை இயங்குகிறது. இந்த ஆலைக்காக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வழங்கிய லைசென்சு கடந்த மார்ச் மாதம் 30-ந் தேதியுடன் முடிந்துவிட்டது. இந்த ஆலையால் அப்பகுதியில் புற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் சுற்றுச்சூழலும் மாசடைந்துள்ளது. இந்நிலையில், இந்த நிலையில் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்யும் பணியில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு மத்திய-மாநில அரசுகளிடம் முறையாக அனுமதி பெறப்படவில்லை. எனவே தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கும், ஆலையை விரிவாக்கம் செய்வதற்கும் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.



