மத்திய தமிழகம், தென் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் கஜா புயல் காரணமாக, ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. சில ரயில்கள் ரத்து செய்யப் பட்டுள்ளன.
56721/56723/56725 மதுரை – ராமேஸ்வரம் பயணிகள் ரயில்கள் இன்று(நவ 15) முழுமையாக ரத்து.
56722/56724/56726 ராமேஸ்வரம் – மதுரை பயணிகள் ரயில்கள் இன்று(நவ 15) முழுமையாக ரத்து.
நவ 13ம் தேதி ஓகாவில் புறப்பட்ட 16734 ஓகா – ராமேஸ்வரம் விரைவு ரயில், இந்த ரயில் இன்று மதுரை – ராமேஸ்வரம் இடையே பகுதியாக ரத்து.
56829/56830 திருச்சி – ராமேஸ்வரம் – திருச்சி பயணிகள் ரயில்கள் இன்று(நவ 15) முழுமையாக ரத்து.
56514 பெங்களூரு – காரைக்கால் பயணிகள் ரயில், இன்று(நவ 15) மயிலாடுதுறை – காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப் பட்டுள்ளது.




