கஜா புயல் மீண்டும் தெற்கு திசையில் நகர்ந்து நாகை அருகே சென்றது. இதனால், நாகை பகுதியில் பரவலாக பலத்த மழை இருக்கும் என்று கூறப் பட்டுள்ளது.
தென், மத்திய தமிழகம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மிக மிக கனமழை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயலால், மரங்கள் அதிகம் சரிந்து விழக் கூடும் என்றும், நிலச்சரிவு ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
எனவே, மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகங்கள் கேட்டுக் கொண்டுள்ளன. #நாகை #திருவாரூர் #லால்குடி #குளித்தலை #கரூர் #தாராபுரம் #பொள்ளாச்சி #வால்பாறை ஆகிய பகுதிகளில் கனத்த மழை இருக்கும் என்று கூறப் பட்டுள்ளது.
இதனிடையே, கஜா புயல் காரணமாக, நவ.15 இன்று, கடலூர், நாகை, இராமநாதபுரம், திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், காரைக்கால், புதுச்சேரி ஆகிய மாவட்ட பகுதிகளில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.