tamilisai soundarrajan bjp - 2026

தமிழகத்தில் உள்ள திராவிட கட்சிகளும், ஒருசில லெட்டர்பேட் கட்சிகளும் இந்து மதத்தை குறிவைத்தே விமர்சனம் செய்து வருகின்றன. சிறுபான்மையினர்களின் வாக்குகளை பெறுவதற்காக இத்தனை கட்சிகள் போட்டி போட்டு கொண்டு இந்து மதத்தை விமர்சனம் செய்து வரும் நிலையில் இதனால் பெரும்பான்மை மதத்தினர்களின் வாக்குகள் கிடைக்காது என்பதை இந்த கட்சிகள் மறந்துவிட்டன

இந்த நிலையில் தொடர்ச்சியாக பாஜகவின் மீது தாக்குதல் நடத்தி வரும் அரசியல் கட்சிகளுக்கு பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் எச்சரித்துள்ளார். கடந்த 7ஆம் தேதிதான் கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பத்தையும் நேற்றிரவு மீண்டும் பாஜக மாவட்ட தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு சம்பவத்தையும் குறிப்பிட்டு கூறிய தமிழிசை, இதுவே பாஜகவின் மீது நடத்தப்படும் கடைசி தாக்குதலாக இருக்க வேண்டும் என்றும் இனியும் பொறுமை காக்க முடியாது என்றும் நாங்கள் பொங்கினால் தமிழகம் தாங்காது என்றும் அவர் ஆவேசமாக கூறியுள்ளார்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவ நான்காம் நாளில்..!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending