நெல்லை மாவட்ட ஆலங்குளம் அருகே தென்காசி சட்டமன்ற உறுப்பினர் செல்வமோகன்தாஸ் பாண்டியனுக்கு சொந்தமான நிலத்தில் கிணறு தோண்டும் பணி நடைபெற்று வந்துள்ளது அப்போது கிணற்றுக்குள் இருந்து மண் அள்ளி வெளியேற்ற பயன்படுத்தும் விஞ்ச் ரோப் அறுந்து விழுந்தது.
இதில் ராஜதுரை என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியானார்.மேலும் 2கூலி தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.இது குறித்து தகவல் அறிந்த ஆலங்குளம் தீயனைப்பு துறையினர் விரைந்து சென்று கிணற்குள் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தவர்களை மீட்டுபாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பலியான ராஜதுரை உடலை மீட்டு பாளை மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்காக ஆம்புலன்சு மூலம் அனுப்பி வைத்து ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்


