ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று இரவு 8 மணிக்கு சென்னை அணிக்கு எதிராக நடக்க போட்டியில் பங்கேற்க உள்ள ராஜஸ்தான் வீரர்கள் வழக்கமாக ஊதா நிற உடை அணிந்து விளையாடுவார்கள். இந்த ஆட்டத்தில் புற்றுநோய் விழிப்புணர்வுக்காக பிரத்யேகமாக இளஞ்சிவப்பு (பிங்க்) சீருடை அணிந்து விளையாட உள்ளனர்.
ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று இரவு நடக்கும் 43-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்சும், ராஜஸ்தான் ராயல்சும் மோதுகின்றன.
10 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 6 தோல்வி என்று 8 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ள ராஜஸ்தான் அணி எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்து சுற்று வாய்ப்பை பற்றி நினைத்து பார்க்க முடியும். அதாவது இந்த ஆட்டம் அவர்களுக்கு வாழ்வா? சாவா? மோதல் என்பது குறிப்பிடத்தக்கது.



