விபத்தில் காயம்பட்ட பெண்ணை காப்பாற்றி வாகனத்தில் அனுப்பி வைத்த கமல்

சற்றுமுன் நெல்லை

 

நெல்லை மாவட்டத்தில், சுற்றுப்பயணம் மேற்கொண்ட மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவர் நடிகர் கமலஹாசன், பணகுடி பகுதியில் பொதுமக்ளிடையே பேசினார். மக்களாகிய உங்களை நான் அறிந்து கொள்வதற்கான பயணம் இது என்றார். மக்களின் தேவை அறியாமல் ஒன்றும் செய்ய முடியாது என்பதாலேயே உங்களை சந்திக்க வந்துள்ளேன் என மக்கள் மத்தியில் பேசினார். கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் கமல், இன்று காலை நெல்லை மாவட்டத்தில் உள்ள பணகுடி என்ற கிராமத்தில் மக்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் மக்கள் நீதி மய்யம் முக்கிய பாதையில் செல்கிறது என்றார். இனி அடிக்கடி உங்களை தேடி வரும் இந்த பயணம் நிகழும் மக்களை தரிசிப்பதற்காகவே இந்த பயணம் என கூறினார் கமல்.

நீங்கள் 50 வருடங்களாக என்னைப் பார்த்து வருகிறீர்கள். இப்போது உங்களைப் பார்க்க நான் வந்துள்ளேன் என்றார். முன்னதாக நேற்று கன்னியாகுமரியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட கமல், சாலை விபத்தில் சிக்கி அடிப்பட்ட பெண் ஒருவரை மீட்டு, அவரை தனது வாகனம் ஒன்றில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.