ஜெகன் என்ன… குருட்டு குதிரைக்கு பல் தேய்ச்சி விட்டுட்டிருந்தாரா?! ரோஷ மிகுதியில் நாயுடு மகன் லோகேஷ் டிவீட்!

Published:

Nara Lokesh EPS - 2026

சந்திரபாபு என்ன கழுதை மேய்த்துக் கொண்டிருந்தாரா என்று ஆந்திர முதல்வர் ஜெகன் கேட்ட கேள்விக்கு… குருட்டு குதிரைக்கு பல்தேய்த்து விட்டீர்களா என்று டிவிட்டரில் பதில் கொடுத்திருக்கிறார் நாரா லோகேஷ்!

இது குறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில், ஜெகன் காரு! காளேஸ்வரம் கட்டியபோது கழுதை மேய்த்தீரா என்று ரொம்ப சாமர்த்தியமான மொழியில் கேட்டீரே! தெலுகுதேசம் ஆட்சி, காளேஸ்வரம் திட்டத்தை மறுத்த செய்திகளை… ஒவ்வொரு செய்தித்தாளாக போய் புரட்டிப் பாருங்கள் என்று காட்டத்துடன் விமர்சித்துள்ளார்.

காளேஸ்வரம் திட்டம் குறித்து ஆந்திர மாநில சட்டப் பேரவையில் நேற்று சூடான விவாதம் நடைபெற்றது. அப்போது, முதல்வர் ஜெகனுக்கும், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கும் இடையில் வாய்ப் போர் வெடித்தது.

அப்போது, காளேஸ்வரம் திட்டம் நிறைவு பெறும் வரை சந்திரபாபு என்ன கழுதை மேய்த்துக் கொண்டிருந்தாரா என்று கோபத்துடன் கேட்டார் முதல்வர் ஜெகன் மோகன். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் சில செய்தித் தாள்களில் வந்த அப்போதைய செய்திகளை டிவிட்டினார்.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

தெலங்கானாவில் கட்டப் படும் காளேஸ்வரம் திட்டத்தால், ஆந்திராவுக்கு தொல்லைகள் இருக்கும் என்று சந்திரபாபு நாயுடு சபையில் கருத்து தெரிவித்தார். அவருடைய விமர்சனத்திற்கு ஜெகன் சூடாக பதிலடி கொடுத்தார். நான் திட்டம் முடிந்த பின்னரே அண்டை மாநில முதல்வர் வந்து அழைத்ததால் தொடக்க விழாவுக்குச் சென்றேன். ஆனால் இந்த திட்டம் கட்டுமானத்தில் இருந்த போது, ஆட்சியிலிருந்த நாயுடு என்ன கழுதை மேய்த்துக் கொண்டிருந்தாரா? என்று கேட்டார் ஜெகன்.

அதனால் இரு தரப்பினரிடையே பலத்த வாக்குவாதம் ஏற்பட்டது. பேரவையில் ஜெகன் செய்த விமர்சனத்திற்கு முன்னாள் அமைச்சர் நாரா லோகேஷ் சூடாக பதிலளித்துள்ளார். தெலுங்கு தேசம் அரசு காளேஸ்வரம் திட்டத்துக்கு மறுப்பு தெரிவித்த செய்திகளை ஆதாரத்தோடு தொடர் டிவிட்ட்ர்களில் வெளியிட்டார். எங்கள் தரப்பு நேர்மையை மக்கள் முன் வைக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஜெகனின் நாளேடான ‘சாட்சி’யில் கூட இது குறித்த செய்திகள் வெளியாகியுள்ளன என்று டிவிட்டர் குண்டைப் போட்டார் லோகேஷ்.

லோகேஷ் தன் டிவிட்டில் “காளேஸ்வரம் கட்டியபோது சந்திரபாபு கழுதை மேய்த்தாரா? என்று ஒய் எஸ் ஜெகன்காரு சமத்காரமான மொழியில் இன்று கேட்டுள்ளார். 2018 ல் ஊழல் செய்தித்தாளான உங்கள் ‘சாட்சி’யில் வந்த செய்திகளைப் பாருங்கள்! அந்த நேரத்தில் குருட்டு குதிரைகளுக்கு பல் விலக்கிவிட்டீர்களா? அதனால்தான் அது போன்ற செய்திகளைப் படிக்க நேரம் இல்லாமல் போனதா? என்று ஏளனமாக கேள்வி எழுப்பியுள்ளார் லோகேஷ்.

ALSO READ:  ஜெனகை மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூர வளையல் அணிவித்து வழங்கல்!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img