காங்கிரஸ் கட்சி சார்பில் மதுவிலக்கு பிரச்சாரம்

சற்றுமுன்

கீழப்பாவூர் ,பாவூர்சத்திரம்  பகுதிளில் காங் கட்சி சார்பில் காந்தி பிறந்தநாள் மற்றும் காமராஜர் நினைவு நாளை  முன்னிட்டு மதுவிலக்கு தெருமுனை பிரச்சாரம் செய்யப்பட்டது.
   கீழப்பாவூர்  நகர, வட்டார காங் கட்சி சார்பில்  மகாத்மாகாந்தி பிறந்த நாள் விழா தீவிர மதுவிலக்கு பிரச்சார நாள்  விழாவாக கொண்டாடப்பட்டது.   கீழப்பாவூரரில்  மகாத்மாகாந்தி, காமராஜ் உருவ சிலைக்கு நெல்லை மேற்கு மாவட்ட காங் தலைவர் எஸ்.கே.டி.பி.காமராஜ் தலைமையில் காங்கிரசார் மாலை அணிவித்து மாரியாதை செலுத்தினர் . மற்றும் பாவூர் சத்திரத்தில் காமராஜர்  சிலைக்கு காங் கட்சியினர்  திரளாக கலந்து கொண்டு மாலை அணிவித்து மாரியாதை செலுத்தினர் . கீழப்பாவூர் ,பாவூர்சத்திரம்  பஸ் ஸ்டாண்ட் மற்றும் முக்கிய வீதிகள் வழியாக ஊர் வலமாக சென்று பொதுமக்களிடம் ,  மது ஒழிப்பு துண்டு பிரசுரங்களை  வழங்கி மதுவிலக்கு குறித்த  தெரு முனைப் பிரச்சாரம் செய்தனர்    நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் செல்வன் ,மாவட்ட  செயலாளர்கள் பொன்கணேசன், ஆறுமுகப்பாண்டி, , மாநில கலை இலக்கிய அணி தலைவர்  ஆலடி சங்கரையா, கீழப்பாவூர்  நகர செயலாளர்  குமரேசன், வட்டார காங் தலைவர்கள் பால்துரை, தங்கரத்தினம், உட்பட பலர்கலந்துகொண்டனர்
இதுகுறித்து மேற்கு மாவட்ட காங் தலைவர் எஸ்.கே.டி.பி.காமராஜ் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் காங் கட்சி சார்பில் தீவிர மதுவிலக்கு பிரச்சாரம் செய்ய தமிழக காங் தலைவர் இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார் இதனை தொடர்நது நெல்லை மாவட்டத்தில் காங் கட்சி சார்பில் அனைத்து கிராமங்களிலும் தீவிர மதுவிலக்கு தெருமுனை பிரச்சாரம் நடைபெற்று வருகிறது என்றார்
 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.