விமானத்தை நாங்கள் தான் சுட்டு வீழ்த்தினோம் என போலி வீடியோ ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் வெளியிட்டதாக ரஷியா விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, பேட்டியளித்த ரஷ்ய விமானப்படையின் முன்னாள் கமாண்டரான ஸ்டீவ் சட்விக் ஓபே கூறியாதாவது :-
எகிப்து நாட்டின் ஷரம் எல் ஷேக் நகரில் இருந்து 224 பேருடன் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு புறப்பட்டு சென்ற மெட்ரோஜெட் ஏர்லைன்ஸ் விமானம் (ஏ–321 ஏர் பஸ்), சினாய் தீபகற்பத்தில் வடக்கு பகுதியில் அமைந்துள்ள நெகேல் என்ற இடத்தில் விழுந்து நொறுங்கியது. இந்த சம்பவத்தில் 224 பேரும் உயிரிழந்தனர். இந்த விமானத்தை நாங்கள் தான் சுட்டு வீழ்த்தினோம் என ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் தெரிவித்து வீடியோ ஆதாரத்தை வெளியிட்டது.
ஐ.எஸ். அமைப்பிடம் 33 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் விமானத்தை சுட்டு வீழ்த்தும் திறன் கொண்ட ஏவுகணைகள் கிடையாது. மேலும் அந்த வீடியோவில் காணப்படுவது ஏர்பஸ் ரக விமானமே அல்ல. அது 33 ஆயிரம் அடியில் பறக்கும்போது எடுக்கப்பட்ட வீடியோவும் அல்ல என கூறினார். இந்த வீடியோ ஆதாரம் போலியானது மட்டுமல்ல, நகைப்புக்குரியதும்கூட என ரஷியா விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


