ரஜினியிடம் கேட்ட கேள்வியை சரத்குமாரிடம் ஏன் கேட்கவில்லை: சந்தோஷ்

Published:

rajini who are you - 2026 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று முன் தினம் தூத்துகுடி சென்று துப்பாக்கி சூடு சம்பவத்தால் பாதிக்கப்பட்டடவர்களுக்கு நேரில் ஆறுதல் கூறி நிவாரண உதவியும் வழங்கினார். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சந்தோஷ் என்ற வாலிபர் ரஜினியை பார்த்து ‘யார் நீங்க’ என்று கேள்வி எழுப்பிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. ஆனால் ரஜினியை தான் ‘யார் நீங்க’ என்று கேள்வி கேட்டதன் நோக்கம் வேறு என்றும், மீடியாக்கள் தங்களுடைய விளம்பரத்திற்காக நான் கேட்ட கேள்வியை தவறாக திரித்துவிட்டதாகவும் சற்றுமுன் வெளியிட்ட வீடியோவில் விளக்கியுள்ளார்.

இந்த நிலையில் நேற்று நடிகரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் தூத்துகுடிக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை பார்த்து ஆறுதல் கூறினார். அப்போது அவர் ரஜினியிடம் ‘யார் நீங்க’ என்று கேள்வி கேட்ட சந்தோஷையும் சந்தித்து ஆறுதல் கூறினார். ஆனால் ரஜினியிடம் கேட்ட ‘யார் நீங்க’ என்ற கேள்வியை சந்தோஷ், சரத்குமாரிடம் கேட்கவில்லை.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

sarathkkumar11 - 2026இதுகுறித்து சந்தோஷ் கூறியபோது, ‘எங்களுடைய 100 நாள் போராட்டத்தில் சரத்குமார் ஒரு நாள் பங்கெடுத்துக்கொண்டார். அதுமட்டுமில்லாமல் நாங்கள் குடித்து கொண்டிருக்கும் மிகவும் மோசமான அந்த தண்ணீரையே அவரும் குடித்தார். எனவேதான் அவரை நீங்கள் யார் என்று கேட்கவில்லை’’ என்று கூறினார்.

Related articles

Recent articles

spot_img