பொறியியல் கலந்தாய்விற்கான ரேண்டம் எண்களை அண்ணா பல்கலைக்கழகம் இன்று வெளியிடுகிறது.
இணைய தளம் மூலம் அண்ணா பல்கலைக்கழக கவுன்சிலிங்கில் பங்கேற்கும் வசதி இந்த ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டது. இதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்ட நிலையில் இன்று காலை 9 மணிக்கு ரேண்டம் எண் வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சொந்த ஊர்களில் இருந்தே பொறியில் படிப்புகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்கலாம்.



