தமிழக காவல்துறை முன்னாள் அதிகாரி வீட்டில் நகை–பணம் கொள்ளை

Published:

 

கோவை மாவட்டம் போத்தனூர் லாயிடஸ் அவென்யூவை சேர்ந்தவர் நீஜாமுதீன் (வயது 60). தமிழக காவல்துறையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

அவர் தனது வீட்டை பூட்டி குடும்பத்துடன் வெளியூருக்கு சென்று விட்டு நேற்று காலை வீட்டிற்கு திரும்பினார். வீட்டு கதவை திறந்து உள்ளே சென்றபோது வீட்டில் பொருட்கள் சிதறி கிடந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டில் உள்ள அறைக்கு சென்று பார்த்த போது அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 24 பவுன் தங்க நகைகள், ரூ. 35 ஆயிரம் பணம், விலை உயர்ந்த கை கடிகாரம் ஆகியவை கொள்ளை போயிருப்பது தெரிந்தது.

வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட கொள்ளையர்கள் வீட்டின் முதல் தளத்தில் உள்ள கதவை உடைத்து உள்ளே வந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிய வந்தது.

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

இது குறித்து அவர் போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் கைரேகை நிபுணர்களை வரவழைத்தனர். அப்போது 4 கொள்ளையர்களின் கைரேகைகள் பதிவாகி இருப்பது தெரிய வந்தது. அதனை வைத்து கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். போலீஸ் உயர் அதிகாரி வீட்டில் கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img